You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ் - இதுதான் காரணமா? மற்றும் பிற செய்திகள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பில்கேட்ஸ்
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவிலிருந்து முழுமையாக வெளியேற இருக்கிறார். தொண்டு நடவடிக்கையில் குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் பருவமாற்றம் தொடர்பான விஷயங்களில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறுகிறார்.
பில்கேட்ஸுக்கு இப்போது வயது 65. இவர் மைக்ரோசாஃப்ட் நிர்வாகக் குழுவில் மட்டும் இல்லை வாரன் பஃபட்டின் நிறுவன நிர்வாக குழுவிலும் இருந்தார். இப்போது அதிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். 2017 காலகட்டத்தில் மட்டும் பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி தொண்டு நடவடிக்கைகளுக்காக 2.8 பில்லியன் டாலர் அளித்திருக்கிறார்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக இரண்டு லட்சம் கோடி. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு தோராயமாக இரண்டு லட்சம் கோடி.
ஸ்பெயினில் ஒரே நாளில் அதிகரித்த உயிரிழப்பு; அவசர நிலை அறிவிப்பு
ஸ்பெயினில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செத் இந்த அறிவிப்பை தொலைக்காட்சி வழியாக நாடு மக்களிடம் தெரிவித்தார். ஸ்பெயினில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4209-ஐ எட்டியுள்ளது.
விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: ஸ்பெயினில் ஒரே நாளில் அதிகரித்த உயிரிழப்பு; அவசர நிலை அறிவிப்பு - அண்மைய தகவல்கள்
மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நோயாளி
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மலேசிய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கோலாலம்பூரில் உள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற நிகழ்வில் புருனே நாட்டைச் சேர்ந்த, கொரோனா கிருமித்தொற்றுள்ள நபர் கலந்து கொண்டது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அந்த நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோரை அடையாளம் காண வேண்டிய பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது மலேசிய சுகாதார அமைச்சு.
விரிவாகப் படிக்க:மலேசியாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வில் கொரோனா நோயாளி: பலருக்கும் பரவி இருக்கலாம் என அச்சம்
கொரோனா வைரஸ்: ஹோமியோபதி சிகிச்சை பலன் தருமா?
மாற்று சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளை ஊக்குவிக்கும் இந்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனா வைரஸுக்கு (கோவிட் 19-க்கு) ஹோமியோபதி முறையில் "சிகிச்சை" இருப்பதாக ஒருபோதும் கூறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இதுபோன்ற ஆதாரப்பூர்வமான விளக்கங்களையும் மீறி, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மாற்று மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி, இந்தியாவில் இதுபோன்ற செய்திகள் இணையதளங்களின் வழியாக தொடர்ந்து பரவி வருகின்றன.
விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: ஹோமியோபதி சிகிச்சையால் குணப்படுத்த முடியுமா?
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா?
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: