You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்ட பிரிட்டன் அமைச்சர், வீழ்ந்த விமானத் துறை, நியூயார்க்கை சூழும் ஆபத்து - விரிவான தகவல்கள்
பிரிட்டன் சுகாதாரத் துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பியுமான நடீன் டோரிஸிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியத்தில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
இங்கிலாந்தில் 324 பேரும், ஸ்காட்லாந்தில் 27 பேரும், வடக்கு அயர்லாந்தில் 16 பேரும், வேல்ஸில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார முகமை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில்தான் நடீன் டோரிஸிக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
இதனை அடுத்து நடீனை சந்தித்த நபர்களை அழைத்து அவர்களையும் பரிசோதிக்க உள்ளதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த விஷயங்களைப் பார்ப்போம்.
- இத்தாலியில் ஒரே நாளில் 168 மரணங்கள் பதிவாகி உள்ளன. ஒட்டு மொத்தமாக அந்நாட்டில் இதுவரை 631 பேர் பலியாகி உள்ளனர்.
- சர்வதேச அளவில் இதுவரை 4,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் கூறுகின்றன.
- நியூயார்க் நகரத்தைச் சுற்றி 1.6 கி.மீ தொலைவில் உள்ள பகுதிகளைக் கட்டுப்பாடு மண்டலமாக அறிவித்துள்ளார் நியூயார் ஆளுநர் ஆண்ட்ரூ.
- நியூயார்க்கில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலோர் நியூ ரோஷல் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
- நியூயார்க் நகரமானது நியூ ரோஷல் பகுதியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. நியூ ரோஷல் மக்கள் தொகை 77,000. இந்தப் பகுதியில் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- உலக வர்த்தக அமைப்பின் ஒரு ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து அனைத்து கூட்டங்களையும் மார்ச் 20ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
- ஒரு பக்கம் தனியார் விமானங்கள் சார்ட்டர்ட் பயணங்கள் மூலம் கொரோனாவால் லாபம் ஈட்டின என்றால், இன்னொரு பக்கம் மொத்த விமானத் துறையும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச அளவில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரயான் ஏர் நிறுவனம் ஏப்ரல் 8ஆம் தேதி வரை அனைத்து இத்தாலிக்கு செல்லும் மற்றும் இத்தாலியிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏப்ரல் 4 வரை அனைத்து இத்தாலி செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: இரானில் ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு; இத்தாலியில் நாடு முழுவதும் பயணத்தடை
- ஆப்கானிஸ்தான் தேர்தல் முடிவில் 2 பேர் ஏட்டிக்குப் போட்டியாக அதிபர் பதவி ஏற்பு
- மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலளிப்பாரா விஜய்?
- கொலைகார ஏரியிலிருந்து எடுக்கப்படும் மீத்தேன் - சகாரா பாலைவன நாட்டின் கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: