ஹமாஸ் - இஸ்ரேல் ராணுவம்: போலி ஆபாச புகைப்படங்களை அனுப்ப ஹேக் செய்யப்பட்ட கைபேசிகள் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், IDF
போலி ஆபாச புகைப்படங்கள்: இஸ்ரேல் ராணுவத்தை ஏமாற்ற ஹமாஸ் செய்த காரியம்
பெண் வேடமிட்ட ஆண்களின் ஆபாச புகைப்படங்களை இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அனுப்பி அவர்களின் கைபேசிகளை ஹேக் செய்ய முயன்று இருக்கிறது ஹமாஸ் அமைப்பு.

பட மூலாதாரம், Getty Images
அதாவது ஆபாச புகைப்படங்கள் கைபேசிக்கு வந்தவுடன் அதனால் ஈர்க்கப்பட்டால் அந்த புகைப்படங்கள் ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய சொல்லும், அதனை தரவிறக்கிய கைபேசிகள் ஹேக் செய்யப்படும். ஆனால், ஹமாஸின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்கிறது இஸ்ரேல் ராணுவம்.

பட மூலாதாரம், Getty Images
"நாங்கள் இதனை கண்டுபிடித்துவிட்டதால் தகவல் எதுவும் களவாடப்படவில்லை," என்றும் சொல்லும் இஸ்ரேல் ராணுவம், மூன்றாவது முறையாக இவ்வாறாக இஸ்ரேல் ராணுவத்துக்குள் ஹமாஸ் ஊடுருவ முயல்கிறது என்கிறது.

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு சரி நிகர் வாய்ப்பு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர பணிவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கில் பெண்களுக்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
பெண்கள் குறித்த சமூக விதிகள், உடல் சார்ந்த வரம்புகள் மற்றும் குடும்பம் சார்ந்த கடமைகள் உள்ளிட்டவற்றை காரணமாக தெரிவித்து ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ராணுவத்தில் பணிவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்க மறுக்கும் மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு தங்களது இந்த தீர்ப்பை மூன்று மாதங்களில் நிறைவேற்ற வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.

ஜாமியா நூலகத்தில் போலீஸ் தடியடி

பட மூலாதாரம், BBC/Jamia JCC
இந்தியத் தலைநகர் டெல்லியில் டிசம்பர் 15 அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக நூலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குவதைக் காட்டும் வீடியோ நேற்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த வீடியோவை ஜாமியா மாணவர் ஒருங்கிணைப்புக் குழு ட்விட்டரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பகிர்ந்தது.

சிஏஏ-வுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம்

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு தெலங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் ஏழு மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
விரிவாகப் படிக்க:சிஏஏ-வுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம் - தெலங்கானா அரசு முடிவு

சிவபெருமானுக்கு ரயிலில் இருக்கை ஒதுக்கப்பட்டது உண்மையா?

பட மூலாதாரம், Getty Images
வாரனாசி - இந்தூர் வழித்தடத்தில் செல்லும் காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்காக எந்த பிரத்யேக இருக்கையும் ஒதுக்கப்படவில்லை என இந்திய ரயில்வே துறை இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள மூன்று ஜோதிலிங்க ஸ்தலங்களை இணைக்கும் காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் வீடியோ கான்ஃப்ரன்ஸிங் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
விரிவாகப் படிக்க:சிவபெருமானுக்கு ரயிலில் இருக்கை ஒதுக்கப்பட்டது உண்மையா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













