You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Coronavirus News: வைரஸ் பாதிப்பு சீனாவில் அதிகரிப்பு: மற்ற நாடுகளில் எப்படி?
கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஹூபே மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்த போதிலும், சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பில் எந்த அதிகரிப்பும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரே விதிவிலக்கு ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பல் மட்டுமே.
இந்த கப்பலில் தற்போது புதிதாக மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் இந்த கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது.
சீனாவை தவிர உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் மரணங்கள் அல்லது கடுமையான பாதிப்பில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
அண்மைய தகவல்களின்படி சீனாவில் மேலும் 121 பேர் இறந்தள்ளனர். இதன்மூலம் சீனாவில்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1380-ஐ எட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட செய்தியில், வியாழக்கிழமை வரை 55,78 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூபே மாகாணத்தில் மேலும் 116 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதேபோல் புதிதாக மேலும் 4823 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் 242 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவின் ஹூபே மாகாணத்தில் அதிகரித்துள்ளது குறித்து குறிப்பிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் அவசரசிகிச்சை திட்டப்பிரிவு தலைவர் மைக் ரயான் கூறுகையில் ''இதனால் உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பு இல்லை'' என்று கூறினார்.
சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது. மேலும் 24 நாடுகளில் 447 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சீனாவில் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சீராக இருந்துவந்த நிலையில், புதன்கிழமையன்று இந்த எண்ணிக்கையில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் செவ்வாயன்று கடந்த இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக 2015 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
- கும்பகோணத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற திருமங்கையாழ்வார் சிலை - நடந்தது என்ன?
- முன்னாள் காதல் நினைவுகளை மறக்க புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு #ValentinesDay2020
- தான் காப்பாற்றிய சிறுமிக்கு பரிசுத்தொகையை பகிர்ந்தளித்த 11 வயது மாணவி - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
- கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவியது சிங்கப்பூர் வழியாகவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: