You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சீனாவில் அதிகரிக்கும் மரணங்கள், இந்தியாவின் நிலை என்ன? - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை உட்பட 565 பேர் பலியாகி உள்ளனர். 28,018 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச அளவில் நடந்துள்ளவற்றை இங்கு தொகுத்து வழங்கி உள்ளோம்.
- கொரோனா வைரஸால் பாதிப்படைந்திருக்கலாம் என்ற அச்சத்தில் சீனாவில் இருந்து வந்த 645 பேர் இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று இந்திய அரசு கூறி உள்ளது.
- இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிப்ரவரி 6 வரை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கிறதா என்று 1,265 விமானங்களில் வந்த 1,38,750 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, நோய் தாக்கிய ஒருவர்கூட புதிதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை.வுஹான் நகரில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 645 பேரையும் சீனா பரிசோதனை செய்து பார்த்து யாருக்கும் நாவல் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லை என்று அறிவித்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளது.
- இந்தியாவில் மூவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.
- இந்தியாவின் நிலவரம் இதுவென்றால் சீனாவின் நிலை மோசமாகி வருகிறது. அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய போதுமான கருவிகள் இல்லை என்று சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜான் சட்வொர்த், "கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் சண்டையிடுவதை போல, தங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் வுஹான் நகரம் செய்து வருகிறது. அரசு ஊழியர்களைப் போற்றுவது போல சீன அரசு ஊடகம் செய்தி வெளியிடுகிறது. ஆனால், அதே நேரம் இங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைப்பதே சிரமமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்." என்கிறார்.
இது தொடர்பாக விரிவாக காண:
- பிரிட்டனில் மூன்றாவதாக ஒரு நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
- சீனாவுக்கு வெளியே அதிகபட்சமாக ஜப்பானில் 45 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதனை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இதனை எதிர்கொள்ள மூன்று மாத செயல்திட்டத்திற்கு 675 மில்லியன் டாலர்கள் நிதி தேவை என அறிவித்துள்ளது.
- 500,000 முகமூடிகள் மற்றும் 40,000 சுவாச கருவிகள் 24 நாடுகளுக்கு அனுப்பப்படும் என கூறி உள்ளது.
- வுஹான் நகரத்திலிருந்து அழைத்து செல்லப்பட்ட 350 அமெரிக்கர்கள் கலிபோர்னியாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- தாய்லாந்தில் 25 பேர், ஆஸ்திரேலியாவில் 14 பேர், வியட்நாமில் 10 பேர், கனடாவில் 5 பேர், பிலிப்பைன்லிஸ் மூவர், ரஷ்யா, இத்தாலி, ஆகிய நாடுகளில் தலா இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- நேபாளம், சுவீடன், இலங்கை, பெல்ஜியம், பின்லாந்து, ஸ்பெயின், கம்போடியா ஆகிய நாடுகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- அமெரிக்காவில் 12 பேரும், சிங்கப்பூரில் 28 பேரும், மலேசியாவில் 12 பேரும், தென் கொரியாவில் 23 பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- இந்தியா மீதான விமர்சனம்: மகாதீர் தொனி மாறிவிட்டது என்கிறார் அன்வார் - காரணம் என்ன?
- 'டியூப்லைட் இப்படித்தான் வேலை பார்க்கும்' - பிரதமர் மோதி; டிரெண்டாகும் GetwellsoonModi
- ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர விரும்புகிறதா ‘கியா’ கார் தொழிற்சாலை?
- #BBCISWOTY: உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களியுங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: