You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி Vs ராகுல் காந்தி: காஷ்மீர் முதல் பொருளாதாரம் வரை - நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம்
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ராகுல்காந்தி குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் காஷ்மீர் உள்பட பல அம்சங்கள் தொடர்பாக பேசினார்.
'காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர், அடுத்த 6 மாதங்களுக்குள் தங்களுக்கு வேலை கிடைக்கவில்லையென்றால் நாட்டில் உள்ள இளைஞர்கள் என்னை பிரம்பால் தாக்குவார்கள் என்றார். நானும் தயராகிவிட்டேன். நான் சூரியநமஸ்காரம் செய்து என் உடலை தயார்படுத்திக் கொள்வேன். என் முதுகு இதுபோன்ற தாக்குதல்களை சமாளிக்க தயாராக உள்ளது'' என்றார் நரேந்திர மோதி.
ராகுலை மறைமுகமாக ட்யூப்லைட் என்று விமர்சித்த மோதி
அந்த சமயத்தில் ராகுல் காந்தி குறுக்கிட்டுப் பேச முயன்றார். அப்போது நரேந்திர மோதி, "நான் கடந்த 30 நிமிடங்களாகப் பேசுகிறேன். இப்போதுதான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. ட்யூப்லைட் இப்படிதான் வேலை செய்யும்," என்றார்.
இதேபோல் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோதி, ''வைகோ அவர்கள், 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கு கருப்பு நாளாக அமைந்துவிட்டது என்று கூறினார். வைகோ அவர்களே, இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கருப்பு நாள் அல்ல, பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வந்தவர்களுக்குதான் இது கருப்பு நாள்'' என்று குறிப்பிட்டார்.
இதற்கு மத்தியில் ட்விட்டரில் பதினொறாயிரம் ட்வீட்டுகளுடன் GetwellsoonModi இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
சரி என்னதான் ஆனது பிரதமர் நரேந்திர மோதிக்கு?
"மோதி நலமாகத்தான் இருக்கிறார். ஆனால், மோதியால் இந்தியப் பொருளாதாரம்தான் நலிந்துவிட்டது" என்கிறார் ட்விட்டர்வாசிகள்.
மேலும் மக்களவையில் மோதியும், அமித்ஷாவும் பொய்யுரைப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள் இணையவாசிகள்.
"காஷ்மீரின் அடையாளம் 1990 ஜனவரி 19ஆம் தேதி புதைக்கப்பட்டுவிட்டது என்கிறீர்கள். சரி. அப்போது யார் ஆட்சி செய்தார்கள்? பா.ஜ.க ஆதரவுடன் வி.பி.சிங் ஆட்சி செய்திருக்கிறார். காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதற்கு பா.ஜ.கதான் காரணம்," என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: