You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை, இறங்கு முகத்தில் பங்கு சந்தை - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 106 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொடர்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்.
- கொரோனா வைரஸால் சீனாவில் 106 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய மாலை நிலவரப்படி 4,515 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இந்த வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக கருதப்படும் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. அந்த ஊருக்கு செல்வது, அந்த ஊரிலிருந்து வெளியூருக்கு பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் அல்லது முன்பே மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர்கள்.
- பலியான 106 பேரில் 100 பேர் ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள். அந்த மாகாணத்தில் மட்டும் 2,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 1.1 கோடி.
- சீனாவுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக தாய்லாந்தில்தான் 8 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் 5 பேரும், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4 பேரும், பிரான்சில் 3 பேரும், வியாட்நாமில் இருவரும், நேபாளம், கனடா, கம்போடியா, இலங்கை, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இந்தியாவில் மத்திய அரசு செயலாளர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது. பல்வேறு நாடுகளிலிருந்து வரும் 137 விமானங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 12 பேரை உடல் பரிசோதனை செய்ததாகவும், யாருக்கும் இந்த வைரஸ் தொற்று இல்லை என அரசு கூறி உள்ளது.
- தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
- சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா தரும் முறையை ரத்து செய்துள்ளது இலங்கை.
- கொரோனா வைரஸில் தாக்கம் பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. அமெரிக்கா மற்றும் லண்டன் பங்கு சந்தைகள் இறங்கு முகத்தைக் கண்டன.
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கியது - சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து
- கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ஆறே நாளில் மருத்துவமனை கட்டும் சீனா
- சீனாவில் இருக்கும் இந்திய மாணவர்களின் நிலை என்ன?
- "உயிர்களை பறிக்கும் புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது" - எச்சரிக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்
- கொரோனா வைரஸ் மரணங்களுடன் தொடங்கிய சீனப் புத்தாண்டு
Xi Jinping - "புதிய வைரஸ் வேகமாக பரவுகிறது" | China President on deadly virus | Coronavirus
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: