You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு பெண்ணின் பத்தாண்டு போராட்டம் - இறுதியில் தாம்தான் தந்தை என ஒப்புக் கொண்ட அரசர் மற்றும் பிற செய்திகள்
பெண்ணின் தசாப்த போராட்டம்
ஒரு பெண்ணின் 15 வருடப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. முன்னாள் பெல்ஜியம் அரசர் இரண்டாம் ஆல்பர்ட்டின் மகள் தாம் எனப் போராடி வந்தார் பெல்ஜிய கலைஞர் டெல்ஃபீன். இத்தனை ஆண்டுகாலமாக மறுத்து வந்த அரசர்,
மரபணு சோதனை செய்யப்படவிருந்ததை அடுத்து தாம்தான் டெல்ஃபீனின் தந்தை என ஒப்புக் கொண்டுள்ளார். டெல்ஃபீனுக்கு தற்போது 51 வயதாகிறது. 2005ஆம் ஆண்டு அவர் அளித்த நேர்காணலில் அரசர் இரண்டாம் ஆல்பர்ட்தான் தன் தந்தை எனக் கூறி இருந்தார். இதனை ஆல்பர்ட் மறுத்ததை அடுத்து, டெல்ஃபீன் நீதிமன்றத்தை நாடினார். 2018ஆம் ஆண்டு மரபணு சோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனைத் தவிர்த்து வந்த ஆல்பர்ட், இப்போது டெல்ஃபீன் தம் மகள்தான் என ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்: பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்ததா?
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்ததாக கூறப்படும் பயணிகள் விமானம் தொடர்பான விசாரணையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு தென் மேற்கே உள்ள கஜ்னி மாகாணத்தின் டே யாக் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ஆரியானா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததாக அந்த மாகாணத்தை சேர்ந்த அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.
விரிவாகப் படிக்க:ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்ததா?
"நான் முஸ்லிம், என் மனைவி இந்து…" - வைரலான ஷாருக் கான் பேச்சு
மதங்கள் குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ள கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் விருந்தினராக கலந்துகொண்ட ஷாருக் கான் போட்டியாளர்களுடன் சேர்ந்து நடனமாடியதுடன், பல்வேறு விடயங்கள் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் மதங்கள் குறித்து ஷாருக் பேசிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விரிவாகப் படிக்க:"நான் முஸ்லிம், என் மனைவி இந்து…" - வைரலான ஷாருக் கான் பேச்சு
பா.ஜ.க. பிரமுகர் கொலை: "மதத்தின் அடிப்படையில் நடந்ததாகத் தெரியவில்லை"
திருச்சியில் கொல்லப்பட்ட பா.ஜ.க. பிரமுகரின் கொலை மதத்தின் அடிப்படையில் நடந்ததாகத் தெரியவில்லையென திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் பால்ராஜ் தெரிவித்திருக்கிறார். குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புப் பாறை பகுதியைச் சேர்ந்தவர் விஜய ரகு. இவர் பாரதிய ஜனதாக் கட்சியின் பாலக்கரை பகுதியின் செயலாளராக இருந்துவந்தார். காந்தி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பவராக பணியாற்றிவந்த விஜய ரகுவை, திங்கட் கிழமை காலையில் ஒரு கும்பல் சுற்றி வளைத்து வெட்டியது. இதன் பிறகு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் - ஐரோப்பிய நாடாளுமன்றம் திட்டம்
இந்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்களில் இந்த வாரம் விவாதமும், அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
விரிவாகப் படிக்க:சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் - ஐரோப்பிய நாடாளுமன்றம் திட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: