அறுவை சிகிச்சையின்போது நடந்த விபரீதம்: அல்கஹாலால் தீ பற்றியது மற்றும் பிற செய்திகள்

அறுவை சிகிச்சையின் போது நடந்த விபரீதம்

ரோமானியாவில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றியது.ரோமானியா மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மின்சாரமும் அல்கஹாலும் வினையாற்றியதால் நோயாளி மீது தீ பற்றியது. இதன் காரணமாக அவருக்கு 40 சதவீத காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பலியானார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கிரேட்டா துன்பர்க் தந்தை: "அவளுக்கு மகிழ்ச்சி; எனக்குதான் வருத்தம்"

ஸ்வீடனை சேர்ந்த 16 வயதான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையை உலகம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார். பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்வீடனின் நாடாளுமன்றம் முன்பு நடத்திய நீண்ட போராட்டம் முதல் ஆவேசம் நிறைந்த ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை வரை கிரேட்டா துன்பர்க்கின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

மலேசியாவிலும் கிடுகிடு விலை உயர்வு

இந்தியாவை அடுத்து மலேசியாவிலும் உரிப்பதற்கு முன்பே கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது வெங்காயம். அங்கு கடந்த சில தினங்களாக ஒரு கிலோ இந்திய சிவப்பு வெங்காயம் 15 மலேசிய ரிங்கிட், அதாவது இந்திய மதிப்பில் 260 ரூபாய்க்கு விற்பனையாவதாக கூறப்படுகிறது.மலேசியாவில் வெளியாகும் தமிழ் மற்றும் இதர மொழி ஊடகங்கள் இதுகுறித்து விரிவாக செய்தி வெளியிட்டுள்ளன.இந்தியாவில் இருந்து சிவப்பு மற்றும் பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என மலேசிய உள்நாட்டு வர்த்தகப் பயனீட்டாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடலை விட்டு வெளியேற்றப்படும் குடியிருப்புவாசிகள் - நடப்பது என்ன?

கூவம் நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஒரு பகுதியாக, சென்னை நகரத்தின் பழமையான குடிசைப்பகுதியான தீவுதிடலில் வசிக்கும் சுமார் 2,000 குடும்பங்களை பெரும்பாக்கத்திற்கு இடம்மாற்றும் பணி தொடங்கியுள்ளது.கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வுகளை கருத்தில்கொண்டு இடமாற்றம் தள்ளிவைக்கப்பட்டாலும், தீவுத்திடலில் உள்ள குடியிருப்பு பகுதியை அகற்றுவதில் மாற்றமில்லை என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் - யார் இவர்?

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இவர் குறித்த முக்கிய தகவல்கள் இவை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: