மன முறிவுகளை எவ்வாறு கையாள வேண்டும்?

பட மூலாதாரம், BBC Three/ David Weller
- எழுதியவர், எட்வினா லாங்லே
- பதவி, பிபிசி த்ரீ
கடைசியாக நான் மன வேதனை அடைந்தது சரியாக ஓராண்டுக்கு முன்பு. என் விஷயத்தில், காலம் முழுவதும் இருந்த அன்பு நிறைந்த வாக்குறுதி திடீரென முடிவுக்கு வந்துவிட்டது.
நான் காதலித்தவருடன் செல்வதாக இருந்த நேரம். அவர் தன் மனதை மாற்றிக் கொண்டார். அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மறுபடி பழைய நிலைக்கு ஒருபோதும் வர முடியாது என்று நான் நினைத்தேன்.
முறிவுகள்
முறிவுகள் எனக்குப் புதியது அல்ல. அதை நான் வழக்கமாகக் கையாளும் பாணி வித்தியாசமானது: வெளியில் செல்வது, குடிப்பது, சிறிது நேரம் மறந்திருப்பது, மீண்டும் அதைச் செய்வது என்பதாக இருக்கும்.
ஆனால் இது செயல்பாட்டுக்கு உதவாத மருந்தாக இருந்தது. ஏனெனில் நீங்கள் ஒருபோதும் உண்மையாக மறந்துவிட முடியாது. முழுமையாக மறக்க முடியாது. எனவே கடந்த ஆண்டு, வேறு ஏதாவது முயற்சிப்பது என்று நான் முடிவு செய்தேன். 32 வயதான நான் என் வாழ்வில் 27 ஆண்டுகள் வாழ்ந்த - லண்டனை விட்டு வெளியேறி - வெளிப்புறப் பகுதிக்குச் சென்றேன்.
வாழ்ந்திட வேண்டும் என்ற நினைப்பு வரும்போது, உறவை `மறந்துவிட வேண்டும்' என்ற நிலை ஏற்படும். தொடர்ச்சியான பயம் இருக்கும்போது என் முன்னாள் காதலருடன் பேருந்தில், தெருவில், பல இடங்களுக்குச் சென்ற நினைவுகள் - மறக்க முடியாதவையாக இருக்கும்.
நகரத்தைவிட முற்றிலும் புதிதான ஒரு தொடக்கம் இருந்தால் எனக்கு மாற்றம் ஏற்படும் என்று நிச்சயமாக நம்பினேன். என்னிடம் அதிக பணம் இல்லாமல் இருந்திருக்கலாம் (சேமிப்புக் கணக்கில் குறைந்த அளவே பணம் இருந்தது). ஆனால் நான் செய்வதற்கான வேலைத் திட்டம் ஒன்று இருந்தது. செலவுத் திட்டத்தை நன்கு உருவாக்குவேன். அதனால் முடிந்த வரை அதிக நாட்களுக்குப் பயன்படுத்த தீர்மானித்தேன்.

பட மூலாதாரம், BBC Three/David Weller
அடுத்த எட்டு மாதங்கள் நான் நல்லதொரு வாசகத்தைத் தேடுவதில் - `மனதிற்கான தெரபி' - நான் மூழ்கிப் போனேன். பல மைல்கள் நடந்தேன், கடலில் நீந்தினேன், விம்மி அழுதேன். முன் எப்போதையும் விட கடுமையாக உழைத்தேன். இருந்தாலும், அவற்றையும் தாண்டி சோகம் மேலோங்கி நின்றது.
அதிக காலம் நகரில் வாழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு - நாட்டுப்புறத்தில் வாழ்வது என்பது - முழுக்க தனிமையானதாக இருப்பதாக உணர்ந்தேன்.
என் குடும்பத்தினரின் ஆதரவு இருந்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் எனக்கு நண்பர்கள் தேவை என்பதை உணர்ந்தேன். சிறிது காலத்தில் பெரும்பாலானவர்கள் தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார்கள். ஏனெனில் வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கிறதல்லவா? வருவதாகச் சொன்னவர்கள் வருவதில்லை. முன் எப்போதையும்விட அதிகமாக தனிமையாக உணர்ந்தேன்.
அது எனக்குள் ஒரு கேள்வியை எழுப்பியது: நல்ல மனமுறிவு என்று ஏதும் உண்டா? என்பது அந்தக் கேள்வி. மன துயரை ஆக்கபூர்வமாகக் கையாள்வதற்கான ஏதும் வழிமுறை உள்ளதா?
எனக்கு வழிகாட்டி ஏதும் இல்லை. இப்போது, ஓராண்டாகிவிட்ட நிலையில், அதைக் கண்டறிவதற்காக இந்தக் கட்டுரையை நான் எழுதுகிறேன்.
மன துயரம் என்பது என்ன?
``முக்கிமாக அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் மனதளவிலான இழப்பு'' என்று மனப்போக்கு உளவியலாளரும் உறவுநிலை பயிற்சியாளருமான ஜோ ஹெம்மிங்ஸ் கூறுகிறார்.
``நம் அனைவருக்கும் அது வெவ்வேறாக இருந்தாலும், வருத்தம், கவலை மற்றும் வலிகளை ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாத உணர்வு போன்றவை பொதுவானவை தான்.''
``மூளையைப் பொருத்த வரையில், உடல் வலியை அறியும் பகுதிகள், உண்மையிலேயே உங்களுக்கு வலி ஏற்படும் போது உணர்வதைப் போன்ற `அதே உணர்வுகளை'' காட்டும். போதை மருந்து அடிமைகளிடம் காணப்படும் கட்டுப்பாடு இழப்புக்கான அதே அறிகுறிகளை வெளிப்படுத்தும்.''

பட மூலாதாரம், Getty Images
என்னைப் பொருத்த வரையில், இது முழுக்க உடலுக்குள் ஏற்படும் வலியாகக் கருதினேன்.
கட்டுப்பாட்டை இழக்கும் அறிகுறிகளைக் கையாள்வது தான் உண்மையான போராட்டம். இன்னொரு முயற்சிக்கான சபலத்தில் - முன்னாள் காதலரை அழைப்பது, அவர்களுடன் கெஞ்சுவது, உங்களைப் பற்றியும், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது பற்றியும் நினைவுபடுத்துவது - என்பது சாத்தியமற்றது. ``மன ரீதியில் பார்த்தால், மோசமான மனமுறிவு உங்களை கவலையின் ஐந்து நிலைகளுக்கு ஆட்படுத்தும் - மறுக்கப்படுதல், கோபம், பேரம் பேசுதல், மன அழுத்தம் மற்றும் இறுதியாக ஏற்றுக்கொள்ளும் தன்மை - ஆகியவற்றுக்கு ஆட்படுத்தும்'' என்று ஜோ கூறுகிறார். ``இந்த செயல்முறையில் பெரும்பாலும் பின்னடைவுகள் இருக்கும்'' என்கிறார் அவர்.
மன வேதனையில் இருந்து எப்படி மீள்வது?
மன வேதனையைக் கையாள்வது என்பது, என்னுடைய கண்ணோட்டத்தில், ஒரு கலை.
ஆனால் அறிவியலில் இருந்து நாம் எதையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அர்த்தமாகாது. உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றியும், அதை நாம் எப்படி கையாளலாம் என்றும் பல ஆய்வுகள் பகுப்பாய்வு செய்துள்ளன.
உதாரணமாக சமீபத்தில் வெளியிடப்பட்ட பரீட்சார்த்த உளவியல் ஜர்னல் ஆராய்ச்சி முடிவில், மூன்று நல்ல அணுகுமுறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது: முன்னாள் காதலரின் கெட்ட விஷயங்களை நினைத்துப் பார்ப்பது, முன்னாள் துணைவர் மீது உங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அதை ஏற்றுக் கொள்வது மற்றும் உங்கள் முன்னாள் காதலருடன் இனி எதுவும் இல்லை என்பது குறித்து நல்ல நினைவுகளை உருவாக்கி இப்போதைய நிலையில் இருந்து விலகிச் செல்வது ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
எதுவுமே முழுமையானவை அல்ல என்றாலும், முன்னாள் துணைவர் குறித்த உளவியல் உணர்வுகளைக் குறைப்பதற்கு இந்த மூன்று விஷயங்களுமே உதவிகரமாக உள்ளன. எனவே மூன்றின் கலவையும் தான் தொடக்கத்துக்கு நல்ல விஷயமாகத் தெரிகிறது.
என்னிடம் சொல்லுங்கள்: ``உனது முன்னாள் காதலர் காலையில் பயங்கர மோசமான சுவாசம் கொண்டவர்.. அவர்களுடைய ஒலிப்பதிவையே ரசிக்கத் தெரியாதவர்.''
பிறகு : ``யாரையாவது காதலித்திருக்கலாம். அது நல்லதாக இருந்திருக்கும் - அவர் தவறாவனர் என்று நீங்கள் நினைத்திருந்தாலும் பரவாயில்லை.''
இறுதியாக: ``இப்போது வானிலை அருமையாக இருக்கிறது இல்லையா?''

பட மூலாதாரம், Getty Images
உறவுநிலை நிபுணரான டீ ஹோல்ம்ஸ் என்பவர் தொடக்கத்துக்கான மற்றொரு விஷயத்தையும் சொல்கிறார்: ``நீங்கள் `நீரில் விளையாடுவதற்கு' சிறிது நேரம் ஒதுக்குங்கள். வேலையில் இருந்து ஒரு நாள் இதற்காக விடுப்பு எடுத்துக் கொள்வது சாத்தியமற்றது என்று நான் நினைக்கவில்லை - நீங்கள் அதிர்ச்சியில் இருந்தால் - உங்கள் பணியைப் பொருத்து, அதுதான் பாதுகாப்பான செயல்பாடாக இருக்கும்.''
``உங்கள் நண்பர்களுடன் பேசுங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்ற நாட்குறிப்பை பராமரியுங்கள்'' என்கிறார் அவர். ஆனால்அது உங்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். அவசரத்தில் முடிவு எடுக்காதீர்கள். உங்கள் முன்னாள் காதலர் இல்லாமல் அந்த வீட்டில் வாழ்வதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சுற்றியுள்ள விஷயங்களை மாற்றிவிட்டால், அநேகமாக சுவர்களுக்கு வேறு வர்ணம் பூசினால், அங்கேயே தங்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.''
சமூக வலைதளங்களில் உங்கள் முன்னாள் காதலருடனான தொடர்பை விலக்கிக் கொள்ளலாம் என்று ஜோ பரிந்துரைக்கிறார்: ``வலிமிகுந்த நினைவுகளை ஏற்படுத்தும் புகைப்படங்கள் அல்லது எழுத்துக் குறிப்புகளை அகற்றுங்கள் அல்லது நீக்கிவிடுங்கள். அது கொடூரமானதாகத் தோனறலாம். ஆனால், நிவாரணம் பெற அது உண்மையில் உதவுகிறது.''
``மெசேஜ் அனுப்பவோ அல்லது அழைக்கவோ செய்யாதீர்கள், குறிப்பாக பின்னிரவு நேரங்களில்'' என்றும் அவர் குறிப்பிடுகிறார். ``விரும்பியதை எழுதி, அதை அழித்துவிடுங்கள், அல்லது தனியாக உங்கள் உணர்வுகளை எழுதுங்கள். அவற்றை சேகரித்து வைக்கவோ அல்லது மறுபடி பார்க்கவோ செய்யாதீர்கள்.''
கவலையின் படிநிலைகளைப் பொருத்த வரையில், கோபமும் ஒரு பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், சில நேரங்களில் பழிவாங்கும் நோக்கிலான கோபம் எரிமலை போன்றதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் கோபத்தால் நன்மைகள் உண்டு: அவர் இல்லாமல் நான் இருக்க முடியாது என்பவரை இழப்பது கஷ்டமாக இருக்கும். இந்த எதிர்மறை உளவியல் வாதத்தை சில நிபுணர்கள் ஏற்பதில்லை.
சிலரை எப்படி கடந்து செல்வது என்ற தலைப்பிலான வாழ்க்கைப் பயிற்சி விடியோ ஒன்றில், முதலில் அவரை ஒருபோதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்வது ஒரு வழியல்ல என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் விஷயத்தில் என்ன செய்தீர்கள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. பிறகு உங்களை நீங்களே ``எதிர்கால துணைவரிடம் இதுபோன்ற தகுதிகளைக் காண்பது சாத்தியமா'' என்று கேட்டுக்கொள்ளுங்கள்.

பட மூலாதாரம், Getty Images
எனவே, என் முன்னாள் காதலரிடம் எந்த விஷயம் எனக்குப் பிடித்திருந்தது? முதலில் அவர் அன்பானவர். உலகில் அன்பான மற்றவர்களும் இருக்கிறார்களா? நல்லது, ஆமாம் இருக்கிறார்கள்.
என்னுடைய உறவு முறையை இப்படி பகுத்துப் பார்ப்பது உதவிகரமாக உள்ளதாக நான் கண்டறிந்தேன்.மனமுறிவு ஏற்பட்ட தொடக்க நிலையில் அல்ல - `கடலில் நிறைய மீன்கள் உள்ளன' என்ற சிந்தனை ஆரம்பத்தில் வலுவானதாக இருக்காது. ஆறுதல் சொல்வது போல மற்றவர்கள் அவ்வாறு சொல்லும்போது, அவர்களுக்குப் புரியவில்லை என்ற நம்பிக்கைதான் பலமாகும்.
ஆனால் காலப்போக்கில், என் முன்னாள் காதலர் முழு பொருத்தமானவர் அல்ல என்ற எண்ணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அவரிடம் நான் கண்ட நல்ல விஷயங்களை மற்றவர்களிடமும் காண முடியும் என்ற நினைப்பு தான், நீங்கள் அடையவேண்டிய முக்கியமான மைல்கல்லாக இருக்க வேண்டும்.
இந்த விஷயங்களை ஒன்று சேர்த்தால் ஒரு செயல் திட்டம் உருவாகும்: உணர்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள், துயரப்படுவதை அனுமதியுங்கள்; குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும், தேவையிருந்தால் ஆலோசகருடனும் பேசுங்கள்.
நாட்குறிப்பு எழுதுங்கள்: சமூக ஊடகங்களைத் தவிர்த்திடுங்கள்; வலியை ஏற்படுத்தும் விஷயங்களை அழித்துவிடுங்கள்; உங்களை விலக்கிக் கொள்ளுங்கள்; அவசர முடிவுகள் எடுக்காதீர்கள்; உங்கள் முன்னாள் காதலருடன் தொடர்பு கொள்ளாதீர்கள்; அவருடைய கெட்ட விஷயங்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்; மேலும் சிறிது காலம் கழித்து அவருடைய நல்ல விஷயங்களை யோசித்துப் பார்த்து, அவை மற்றவர்களிடமும் இருக்கும் என்று யோசியுங்கள்.
அது காலத்தைப் பொருத்த விஷயம் தான்.
குணமாதல் செயல்பாடு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும்?
``காதலை நீங்கள் அவசரப்படுத்த முடியாது'' என்று தி சுப்ரீம்ஸ் குழு பாடியுள்ளது - மற்றும் சோகம் என்னவெனில், அதை சீக்கிரம் மறந்துவிடவும் முடியாது.
மன முறிவு நல்லது என்று ஒருவர் உணர்வதற்கு சுமார் மூன்று மாதங்கள் (சரியாகச் சொன்னால் 11 வாரங்கள்) ஆகும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
நான் சொன்னதைப் போல, மன முறிவு என்பது அறிவியல் அல்ல.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த கட்டம் நோக்கிச் செல்வோம் என்று நான் உணர்வதற்கு, எனக்கு ஆறு மாதங்களானது. அப்போது உண்மையில் நான் தயாராகிவிட்டேன்.
மேலும் எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யமாக - நல்ல வேளையாக - நான் கண்டறிந்த நபர் அர்த்தமுள்ள தொடர்பின் சக்தி பற்றிய என் நம்பிக்கையைப் புதுப்பிப்பவராக இருந்தார். அதன்பிறகு என் முன்னாள் காதலருக்காக நான் கண்ணீர் சிந்தவில்லை.
தனிப்பட்ட பின்வரும் கருதுகோளுடன் நான் இந்த முடிவை எடுத்தேன்: மனமுறிவில் இருந்து மீண்டு வருவது என்பது முரண்பாடான ஒரு சவால், மிகவும் சிரமமானது. ஏனெனில் அது எளிமையானது.
ஆனால், குறிப்பாக நுட்பம் இதுதான்; நீங்கள் காதலுக்கு உகந்தவராக இருக்கிறீர்கள். காலப்போக்கில் அது உங்களை மீண்டும் கண்டுபிடிக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












