செளதி அரேபியா அரம்கோ தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு - விரிவான தகவல்கள்

பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கச்சா எண்ணெய்யின் விலை திங்களன்று சுமார் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு செளதி அரசுக்குச் சொந்தமான அரம்கோவின் இரண்டு வளாகங்களில் நடைபெற்ற தாக்குதலால் விலை நடைபெற்றுள்ளது.

செளதி அரசுக்குச் சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் கடந்த சனிக்கிழமையன்று ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

உலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.

தாக்குதலுக்குப் பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வர்த்தகத்தின் ஆரம்பத்தில் பெண்ட் க்ரூட் முதலில் 20 சதவீதம் வரை உயர்ந்தது. அதன்பின் பேரலுக்கு 69அமெரிக்க டாலர்களாக மாறியது. என 14.6 சதவீத உயர்வு இருந்தது. இது 2008ஆம் ஆண்டு பிறகு மிகப்பெரிய விலையேற்றம்.

இதனால் தினமும் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என செளதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

செளதி அரேபியா

பட மூலாதாரம், Reuters

இது செளதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்.

அமெரிக்காவின் சேமிப்புகளை வெளியிடுவதாக டிரம்ப் தெரிவித்த பிறகு விலை சற்று குறைந்தது.

இந்த தாக்குதல் அந்த பிராந்தியத்தில் ஆற்றல் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இப்போது ஏற்பட்டுள்ள இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்கள் மீது உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது. என்கிறார் விஸ்டன் ட்ரீயின்

ஆனால் இதே நிலை ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து இருந்தால்,

பெட்ரோல் விலையில் ஏற்றம் ஏற்படுமா?

ஓட்டுநர்கள் இந்த விலை ஏற்றத்தை உடனடியாக உணரமாட்டார்கள் என்கிறார் சர்வதேச ஆற்றல் கொள்கை நிபுணர் பேராசிரியர் நிக் பட்லர்.

இந்த தாக்குதலின் நேரடி தாக்கம் சிறிது காலத்திற்குத்தான் என்றும் கூறுகிறார் நிக்.

எண்ணெய்

சில அரசியல் காரணங்களால் வெனிசுவேலா மற்றும் இரானில் நாளொன்றுக்குத் தயாரிக்கப்பட்டு வந்த இரண்டு மில்லியன் பேரல்கள் நின்றுபோனபோதும் சந்தையில் பெரிதாக எந்த ஒரு தாக்கமும் இல்லை என்கிறார் நிக்.

செப்டம்பர் 6ஆம் தேதியான காலகட்டத்தில் அமெரிக்காவிடம் 644.8 மில்லியன் பேரல்கள் சேமிப்பு இருப்பதாக அமெரிக்காவின் ஆற்றல் துறை தெரிவிக்கிறது.

செளதி அரேபியாவிடம் தற்போது 188 பேரல்கள் கையிருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டும், மறுப்பும்

இரான் ஆதரவு பெற்ற, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ இரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது ஏமனில் இருந்து நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை இரான் மறுக்கிறது.

அமெரிக்கா தங்கள் மீதும் வஞ்சம் வைத்தும் குற்றம் சுமத்துவதாகவும், "இரான் மீது குற்றம் சுமத்துவதால் ஏமனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேரழிவு நின்றுவிடாது," என இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சரிஃப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரான்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்ற தங்களின் கூற்றை நீருபிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் உளவுத் துறை தரவுகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

செளதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளிக்கிறது.

"முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக ஆற்றல் விநியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது," என பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

அதே சமயம் குற்றவாளி யார் என தங்களுக்குத் தெரியும் என்றும், ஆனால் இதனை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என செளதி அரேபியாதான் கூற வேண்டும் என்றும் அதற்காகக் காத்திருப்பதாகவும் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் இரானின் அணு ஆயுத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை டிரம்ப் நிராகரித்து அந்நாட்டின் மீதான தடையை நீடித்ததால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Presentational grey line

பெரியார் எந்த அளவு வட இந்திய இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார்?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :