அமெரிக்காவில் தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலைக்குள் விழுந்த புதுமாப்பிள்ளை

பட மூலாதாரம், GOFUNDME
தேன்நிலவுக்கு சென்ற இடத்தில் எரிமலை ஒன்றுக்குள் விழுந்த, அமெரிக்காவைச் சேர்ந்த புதுமாப்பிள்ளையை அவரது மனைவி மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
மவுண்ட் லியாமுய்கா எனும் அந்த எரிமலையின் உச்சி வரை 3.2 கிலோ மீட்டர் உயரத்துக்கு மலையேற்றம் செய்தபின் அதன் உள்ளே இருக்கும் பசும் தோற்றத்தை க்ளே சாஸ்டியன் எனும் அவர் பார்க்க முயன்றபோது தவறுதலாக சறுக்கி விழுந்துவிட்டார்.
அந்த எரிமலை செயலற்ற நிலையில் இருந்ததால் நெருப்புக் குழம்பு எதுவும் அவருக்கு பாதிப்பை உண்டாக்கவில்லை. எனினும், அவருக்கு கழுத்தில் காயம் உண்டானது.

பட மூலாதாரம், GOFUNDME
கணவரின் கூக்குரல் கேட்ட அவரது மனைவி அகைமி அந்த எரிமலைக்குள் இறங்கி அவரை மீட்டபின், புளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
க்ளே சாஸ்டியனை புளோரிடா மருத்துவமனைக்கு கொண்டு வர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்வதற்காக 30,000 டாலர் அளவுக்கு இணையம் மூலம் திரட்டப்பட்டது.

பட மூலாதாரம், GOFUNDME
கரீபியன் தீவுகளில் ஒன்றான செயின்ட் கிட்ஸ் தீவில் கடந்த ஜூலை 18ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தம்பதிக்கு அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இண்டியானா மாகாணத்தில் திருமணம் முடிந்தது.
"எரிமலைக்குள் விழுந்தபின் எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்த என்னை அவள் கீழே இருந்து சுமந்து வந்தது ஓர் அதிசயத்தைத் தவிர வேறொன்றும் இல்லை," என்று தன் மனைவியின் செயல் குறித்து க்ளே கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












