டொனால்ட் டிரம்ப்: காங்கிரஸ் பெண்களுக்கு எதிராக இனவெறி பதிவுகளை பகிர்ந்தாரா? மற்றும் பிற செய்திகள்

டிரம்ப்

பட மூலாதாரம், Alex Wong

'இனவெறி பதிவுகளை பகிர்ந்தாரா டிரம்ப்?'

ஜனநாயக கட்சியை சேர்ந்த காங்கிரஸ் பெண்களுக்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்டுகளை பகிர்ந்ததை அடுத்து, அவர் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பேரழிவு நாட்டிலிருந்து வந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த காங்கிரஸ் பெண்கள், உலகத்திலேயே சக்தி மிகுந்த நாட்டின் அரசு எப்படி செயல்பட வேண்டுமென வகுப்பெடுக்கிறார்கள் என்ற தொனியில் மூன்று ட்வீட்டுகளை டிரம்ப் பகிர்ந்திருந்தார்.

அவர் அந்த ட்வீட்டில் நேரடியாக அந்த காங்கிரஸ் பெண்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ரஷிதா டலீப், ஒகாஸியோ கோர்டெஸ், ஐயானா ப்ரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் உள்ளிட்ட காங்கிரஸ் பெண்களையே அவர் மறைமுகமாக குறிப்பிடுவதாக தெரிகிறது.

Presentational grey line

'சந்திரயான் - 2 : இறுதி நேரத்தில் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது ஏன்?'

'சந்திரயான் - 2 : இறுதி நேரத்தில் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது ஏன்?'

பட மூலாதாரம், ISRO

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் - 2 செயற்கைக்கோள் ஏவப்படுவது தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருந்த நிலையில், கவுன்ட் - டவுன் நிறுத்தப்பட்டது.

நிலவில் ஊர்ந்துசெல்லும் வாகனத்தை இறக்கி, ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து ஏவப்படவிருந்தது.

Presentational grey line

'இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றது எவ்வாறு?'

'இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றது எவ்வாறு?'

பட மூலாதாரம், MIKE HEWITT/GETTY IMAGES

ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி.

இதுவரை உலகில் நடந்ததிலேயே மிகவும் பரபரப்பான ஒரு நாள் போட்டி என்று சற்றும் தயங்காமல் சொல்லக்கூடிய அளவுக்கு ஆட்டத்தின் போக்கு அமைந்தது.ஐம்பது ஓவர்கள் முடிவில் டையில் முடிந்த போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால், சூப்பர் ஓவருக்கான விதிமுறைகளின்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுதாக அறிவிக்கப்பட்டது.

Presentational grey line

'இலங்கை மரண தண்டனை: தீர்மானத்தில் பின்வாங்கப் போவதில்லை'

'இலங்கை மரண தண்டனை: தீர்மானத்தில் பின்வாங்கப் போவதில்லை'

பட மூலாதாரம், Getty Images

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எடுத்த தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனை நாட்டுக்கு அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்துமாறு, நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Presentational grey line

புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராகிறோமா?

புதிய பாலியல் புரட்சிக்கு நாம் தயாராகிறோமா?

பாலுறவு இல்லாமல் பிள்ளை பெறுதல், வரம்பற்ற பாலியல் தொடர்புகள் என பாலியல் தொடர்பான நம்முடைய போக்குகள் வெகு சீக்கிரத்தில் வேகமான மாறுதல்களை சந்திக்கும் என்று கணிக்கிறார் எழுத்தாளர் பிரான்டன் அம்ப்ரோசினோ.

ஆனால் இனப்பெருக்கத்தில் பாலுறவுக்கு ஏறத்தாழ எந்தத் தொடர்பும் இல்லை என்ற நிலை வருமானால், பாலியல் உறவு பற்றி நாம் என்ன நினைப்போம்?

``இன்னும் 20 முதல் 40 ஆண்டுகளில் உலகெங்கும் பெரும்பாலான மக்கள், மருத்துவ வசதி மிக்கவர்கள், சோதனைச்சாலையில் கருத்தரித்துக் கொள்வதை விரும்புவார்கள்'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :