அமெரிக்க-சீன வர்த்தகப்போர்: பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முடிவு

பட மூலாதாரம், Getty Images
உலகப் பொருளாதார மந்த நிலைக்கு வித்திட்ட நீண்ட சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவும், சீனாவும் இசைந்துள்ளன.
ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவெய்க்கு பொருட்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது,
சீனா மீது மேலதிக தடைகளை விதிக்கப் போவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், EPA
ஒசாகாவில் நடைபெற்ற இந்த உச்ச மாநாட்டில்போது நடைபெற்ற இந்த சந்திப்பில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 300 பில்லியன் மதிப்பிலான வரியை விதிக்கப்போவதில்லை என்பதை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
இனி சீனாவோடு பேச்சுவார்த்தையை தொடரப்போவதாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- 'எனது இடத்தை நிரப்பும் பெண் அழகாக இருக்க வேண்டும்' - தலாய் லாமாவின் சர்ச்சை பேச்சு
- "என் மகனின் தந்தை யார் என தெரியாது": பாலியல் வல்லுறவுக்கு ஆளான ருவாண்டா பெண்ணின் வாழ்க்கை
- சிலோன் காலனியில் இருந்து நியூசிலாந்துக்கு - நடுக்கடலில் மாயமான 243 பேர்
- முதலில் தோன்றிய மொழி எது? மனிதர்கள் பேச தொடங்கியது எப்போது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












