கென்யாவில் கோலாகலமாக நடக்கும் காளை சண்டை - ஏராளமானோர் பங்கேற்பு (புகைப்படத் தொகுப்பு)

People and bulls

பட மூலாதாரம், Duncan Moore

கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள லுஹ்யா சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே காளை விளையாட்டு என்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

அதாவது, இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும் இங்கு காளை விளையாட்டு நடத்தப்படுவதுண்டு. மிகவும் போட்டி மிக்க தொழிலாக இருப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் லாபகரமானதாகவும் இது பார்க்கப்படுகிறது.

டன்கன் மூரே எனும் புகைப்பட கலைஞர் கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள 'ககமேக' எனும் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் காளை விளையாட்டை பிரதான மற்றும் சட்டப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கு எப்படி தொடர் போட்டிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதை பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டை போலன்றி சாதாரண விவசாய நிலங்களிலேயே இங்கு காளைகள் சீறிப் பாய்கின்றன.

இதோ காளை விளையாட்டை காட்சிப் படுத்தும் புகைப்படங்கள்.

ஒரு சனிக்கிழமையன்று காலைநேரத்தில், ஒரு காளை மாட்டு வீரர் பரிவாரங்களுடன், அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த மற்றொருவரின் காளையுடன் நடைபெறவுள்ள போட்டிக்கு தனது காளையை அழைத்துச் செல்கிறார்.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, ஒரு சனிக்கிழமையன்று காலைநேரத்தில், ஒரு காளை மாட்டு வீரர் பரிவாரங்களுடன், அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த மற்றொருவரின் காளையுடன் நடைபெறவுள்ள போட்டிக்கு தனது காளையை அழைத்துச் செல்கிறார்.
இவ்வாறாக ஒருவர் தனது காளையை போட்டிக் களத்திற்கு அழைத்துச் செல்லும்போது, வழிநெடுகில் நின்றுக் கொண்டிருக்கும் 'இசுக்குட்டி' எனும் இசைக்கலைஞர்கள் பாரம்பரிய இசையை இசைத்து மக்களை கவர்ந்தெழுகின்றனர்.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, இவ்வாறாக ஒருவர் தனது காளையை போட்டிக் களத்திற்கு அழைத்துச் செல்லும்போது, வழிநெடுகில் நின்றுக் கொண்டிருக்கும் 'இசுக்குட்டி' எனும் இசைக்கலைஞர்கள் பாரம்பரிய இசையை இசைத்து மக்களை கவர்ந்தெழுகின்றனர்.
போட்டிக்களத்தை அடைந்த காளைகளை பார்ப்பதற்காக கூட்டம் அதிகமானதால், சிறுவர்கள் அருகிலுள்ள மரங்களில் ஏறி போட்டியை கண்டுகளிக்க ஆயத்தமாகுகின்றனர்.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, போட்டிக்களத்தை அடைந்த காளைகளை பார்ப்பதற்காக கூட்டம் அதிகமானதால், சிறுவர்கள் அருகிலுள்ள மரங்களில் ஏறி போட்டியை கண்டுகளிக்க ஆயத்தமாகுகின்றனர்.
சண்டைக்கு முன்னதாக போட்டி ஏற்பாட்டு குழுவினர் காளையொன்றை பரிசோதிக்கின்றனர்.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, சண்டைக்கு முன்னதாக போட்டி ஏற்பாட்டு குழுவினர் காளையொன்றை பரிசோதிக்கின்றனர்.
தன்னை அழைத்து வந்த ஒருவரையே விரட்டுகிறது டுபா டுபா எனும் இந்த காளை.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, தன்னை அழைத்து வந்த ஒருவரையே விரட்டுகிறது டுபா டுபா எனும் இந்த காளை.
இந்த புகைப்படத்தில் பார்ப்பதைப்போன்று, காளை சண்டையை பொறுத்தவரை, அதை பார்க்க வருபவர்களே பல சமயங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவுகிறது.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, இந்த புகைப்படத்தில் பார்ப்பதைப்போன்று, காளை சண்டையை பொறுத்தவரை, அதை பார்க்க வருபவர்களே பல சமயங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலை நிலவுகிறது.
ஆரம்பித்தது போட்டி!

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, ஆரம்பித்தது போட்டி!
People cheer on the animals during a bull fight in western Kenya

பட மூலாதாரம், Duncan Moore

தங்களுக்கு சொந்தமான அல்லது விருப்பமான காளையை நிகழ்வை நேரில் பார்ப்பவர்கள் கூக்குரலிட்டு உற்சாகப்படுத்துகின்றனர்.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, தங்களுக்கு சொந்தமான அல்லது விருப்பமான காளையை நிகழ்வை நேரில் பார்ப்பவர்கள் கூக்குரலிட்டு உற்சாகப்படுத்துகின்றனர்.
இதுபோன்ற போட்டிகளுக்கு, கென்யாவை சேர்ந்த விலங்கு உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தங்களது பொருளாதார செயல்முறையின் முக்கிய கூறு என்றும் காலங்காலமாக தொடர்ந்து வரும் பாரம்பரியம் என்றும் இந்த போட்டியின் அமைப்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, இதுபோன்ற போட்டிகளுக்கு, கென்யாவை சேர்ந்த விலங்கு உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தங்களது பொருளாதார செயல்முறையின் முக்கிய கூறு என்றும் காலங்காலமாக தொடர்ந்து வரும் பாரம்பரியம் என்றும் இந்த போட்டியின் அமைப்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
காளைகளுக்கிடையேயான போட்டி ஒருபுறமிருக்க, அதன் உரிமையாளர்களுக்கு இடையேயும் சூதாட்டத்தை மையப்படுத்தி அவ்வப்போது சண்டை நடக்கிறது.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, காளைகளுக்கிடையேயான போட்டி ஒருபுறமிருக்க, அதன் உரிமையாளர்களுக்கு இடையேயும் சூதாட்டத்தை மையப்படுத்தி அவ்வப்போது சண்டை நடக்கிறது.
காளைகள் ஒரு விவசாய நிலத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதை அடுத்து அதன் பார்வையாளர்களும் ஆர்ப்பரிப்புடன் நகர்கின்றனர்.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, காளைகள் ஒரு விவசாய நிலத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதை அடுத்து அதன் பார்வையாளர்களும் ஆர்ப்பரிப்புடன் நகர்கின்றனர்.
இந்த போட்டியில் தோல்வியடைந்த டுபா டுபா எனும் காளை மற்றும் அதன் உரிமையாளர் ஆகியோர் வீட்டுக்கு திரும்புகின்றனர். உலகின் மற்ற சில பகுதிகளுக்கு போன்று கென்யாவில் தோல்வியடைந்த காளை விற்கப்பட்டு, உணவுக்காக கொல்லப்படுவதில்லை.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, இந்த போட்டியில் தோல்வியடைந்த டுபா டுபா எனும் காளை மற்றும் அதன் உரிமையாளர் ஆகியோர் வீட்டுக்கு திரும்புகின்றனர். உலகின் மற்ற சில பகுதிகளுக்கு போன்று கென்யாவில் தோல்வியடைந்த காளை விற்கப்பட்டு, உணவுக்காக கொல்லப்படுவதில்லை.
போட்டியில் வெற்றிப்பெற்ற மிசாங்கோ எனும் காளையை வாழ்த்திய வண்ணம் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் கிராமத்தை நோக்கி செல்கின்றனர்.

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, போட்டியில் வெற்றிப்பெற்ற மிசாங்கோ எனும் காளையை வாழ்த்திய வண்ணம் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் கிராமத்தை நோக்கி செல்கின்றனர்.
கென்யாவில் கோலாகலமாக நடக்கும் காளை விளையாட்டு - ஏராளமானோர் பங்கேற்பு

பட மூலாதாரம், Duncan Moore

படக்குறிப்பு, "தலைமுறை தலைமுறையாக, எங்களது தாத்தாவும், அப்பாவும் பாரம்பரியமாக காளைகளை வளர்த்ததை போன்று நானும் தற்போது காளை வளர்க்கிறேன்" என்று கூறுகிறார் உள்ளூரை சேர்ந்த காளை உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ஜெரால்டு அஷியனோ. "இது எங்களுக்கு மிகப் பெரிய ஆதரவாளர்களை கொண்ட ஒரு கலாசார மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வு. காளை சண்டையின் எதிர்காலம் மிகவும் பிரகாசமான உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :