ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நுழையும் வலதுசாரி கட்சி மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நுழையும் வலதுசாரி கட்சி
ஸ்பெயினில் ஆளும் சோஷியலிஸ்ட் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் வென்றுள்ளது. ஆனால், அந்த கட்சியால் முழுமையான பெரும்பான்மையை பெற முடியவில்லை. ஸ்பெயினில் நான்காண்டுகளில் நடந்த மூன்றாவது தேர்தல் இது. இந்த தேர்தலில் வலதுசாரிகள் கணிசமான வாக்குகளை வெற்றுள்ளது.
வலதுசாரி கட்சியான வாக்ஸ் கட்சி 10.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது 350 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஸ்பெயின் வாக்ஸ் கட்சி பெற போகும் இடம் 24. முறைப்படுத்தப்படாத குடிப்பெயர்வு, பெண்ணியம் ஆகியவற்றுக்கு எதிராக கருத்துடையது இந்த வாக்ஸ் கட்சி.
ஸ்பெயினில் 1970களில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு முதல்முறையாக ஒரு வலதுசாரி கட்சி நாடாளுமன்றத்தில் நுழையவுள்ளது.

'சஹ்ரான் காசிமின் தந்தை மற்றும் சகோதரர்கள் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்'

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை பாதுகாப்பு படைகளால் சந்தேகிக்கப்படும் சஹ்ரான் காசிமின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள், வெள்ளியன்று நடந்த பாதுகாப்பு படைகளின் கள நடவடிக்கைகளின்போது கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரிவாக படிக்க:'சஹ்ரான் காசிமின் தந்தை மற்றும் சகோதரர்கள் கொல்லப்பட்டனர்'

இந்தோனீசியாவில் தேர்தல் பணிச்சுமையால் உயிரிழந்த 272 ஊழியர்கள்

பட மூலாதாரம், Getty Images
இந்தோனீசியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பணியாற்றியதால் உண்டான பணிச்சுமையால் 272 தேர்தல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலானவர்களின் உயிரிழப்புக்கான காரணம் அயர்ச்சியுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது 1,878 ஊழியர்கள் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக இந்தோனீசியாவின் பொது தேர்தல் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரீப் பிரியோ சுசாந்தோ தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க:தேர்தல் பணிச்சுமையால் உயிரிழந்த 272 ஊழியர்கள்

இலங்கை குண்டுவெடிப்பால் சந்தேகங்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

இலங்கையில் ஏப்ரல் 21ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் இஸ்லாமிய சமூகத்தை மேலும் பின்னுக்கு தள்ளும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் இ.முகமது தெரிவித்துள்ளார்.வஹாபிஸ கொள்கைகளை நாங்கள் பின்பற்றுவதில்லை, அதை நாங்கள் முன்மொழிவதும் இல்லை. இறந்தவர்களை தர்கா அமைத்து வழிபடும் முறையை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை வஹாபிஸத்தை பின்பற்றுகிறவர்களும் எதிர்க்கிறார்கள் என்பதால், சிலர் எங்களை வஹாபிஸ்டுகளாக பார்க்கிறார்கள். எங்களுக்கு அந்த பின்புலம் கிடையாது, இஸ்லாம் மதத்தை மட்டும் பின்பற்றுகிறோம் என அவர் கூறுகிறார்.

கடலில் வாழும் இரண்டு லட்சம் வகை வைரஸ்கள் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், ANNA DENIAUD, FONDATION TARA OCÉAN
உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.இந்த வைரஸ்கள் கடலின் உள்ளே சுமார் 4,000 மீட்டர்கள் ஆழத்தில் வட துருவம் முதல் தென் துருவம் வரை உள்ள பகுதிகளில் காணப்படுவதாக அந்த ஆராய்ச்சி முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவற்றில் பெரும்பாலானவை மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், இவை திமிங்கலம், இரால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
விரிவாக படிக்க:கடலில் வாழும் இரண்டு லட்சம் வகை வைரஸ்கள் கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












