ரகசிய கேமரா மூலம் ஆபாச காணொளி - 1600 பேரின் அந்தரங்கம் பாதிப்பு மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், JUNG HAWON
தென்கொரியாவில் ஓட்டல் அறை எடுத்து தங்கிய விருந்தாளிகளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஓட்டலில் ரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச காணொளியை தயாரித்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் 1600 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது கொரியாவில் செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டல் அறையில் உள்ள தொலைக்காட்சிகளில், ஹேர் டிரையர் மாட்டுவதற்கு வைக்கப்படும் பிடிப்பச்சட்டம் ((Holder) மின்சாரம் மூலம் இயங்க தேவையான பொருள்களுக்கான மின் புதை குழி (Socket) ஆகியவற்றில் மினி கேமரா வைத்து அந்தக் குழு ஆபாச படம் எடுத்திருக்கிறது. இப்படங்கள் மூலமாக 6200 டாலர்கள் அதாவது சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமான ரூபாய் அக்குழு சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
அவர்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியதிருக்கும் மேலும் அந்நாட்டு மதிப்பில் 30 மில்லியன் வான், அதாவது சுமார் 18 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தவேண்டியதிருக்கும்.
செக்ஸ் மற்றும் நிர்வாணத்தை ரகசியமாக படம் பிடிப்பது தென்கொரியாவில் ஒரு தொற்றுநோயாக இருப்பதாக விவரிக்கப்படுகிறது. இதனால் அங்கு போராட்டங்கள் எழுச்சி பெறுவதற்கு இந்த விவகாரம் ஒரு காரணியாக அமைந்துள்ளது.
கொரிய காவல்துறை பிபிசியிடம் பேசியபோது அந்த குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 1 மிமி லென்ஸ் கேமராவை பத்து தென் கொரிய நகரங்களில் 30 வெவ்வேறு ஓட்டல்களில் பொதித்துள்ளனர்.
நவம்பர் மாதம் ஒரு வெப்சைட் துவக்கி அதில் காணொளிகளை பதிவிட்டுள்ளது. முப்பது நொடிகள் இலவசமாக அக்காணொளியை பார்க்கவும் அதற்கு மேல் பார்ப்பதற்கு பணம் கட்ட வேண்டும் எனும் திட்டத்தை செயல்படுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
இந்த குழுவினர் 803 காணொளிகளை இதுவரை வெளியிட்டுள்ளதாகவும். அந்நிய நாட்டு சர்வர் மூலம் இந்த வெப்சைட்டை நடத்தியாகவும் கூறப்படுகிறது.
இதுவரை 97 பேர் இந்த தளத்தில் பணம் கட்டியிருக்கின்றனர். தற்போது இந்த தளம் முடக்கப்பட்டு விட்டது என்கிறது காவல்துறை.
ஆபாச காணொளியை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை தென் கொரியாவில் சட்டப்படி குற்றமாகும்.
ஆபாச காணொளிகள் தயாரித்து வெளியிடும் விவகாரத்துக்கு கொரியாவில் வேகமான இணையதள வசதி ஒரு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.
பல காணொளிகள் கழிவறை, உடை மாற்றும் அறையில் எடுக்கப்பட்டுள்னர். பொதுவாக ஒரு இணை பிரிந்த பிறகு தனது முன்னாள் இணையை பழிவாங்க இவ்வாறு ஆபாச காணொளிகளை வெளியிடப்பட்டுள்ளது.
கொரியாவில் 2012 இது போன்ற குற்றங்கள் தொடர்பாக 2400 வழக்குகள் இருந்தன, 2017-ல் 6000 வழக்காக அதிகரித்துவிட்டது. 5400 பேர் ரகசிய கேமெரா வைத்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டாலும் அதில் 2% பேர் தான் சிறையில் அடைக்கப்பட்டனர்.
'எனக்கு முன்பே தெரியும்' என்கிறார் 'பார்' நாகராஜ் - பிபிசி கள ஆய்வு
''கடந்த ஆண்டே எனக்கு இது குறித்து தெரியும். என் நண்பரின் தங்கையும் பாதிக்கப்பட்டிருந்தார். நான் போலீஸிடம் புகார் அளிக்கலாம் என்று கூறினேன். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை'' என்கிறார் பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் வழக்கு தொடர்பாக செய்து சேகரிக்க கடந்த நான்கு நாட்களாக பொள்ளாச்சி மற்றும் கோவையில் பல்வேறு தரப்புகளை சந்தித்தோம். அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், போலீஸ் தரப்பு மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோரை பிபிசி தமிழ் சந்தித்தது.
அவர்கள் பிபிசி தமிழிடம் கூறியவற்றை பல்வேறு தரப்புகளிடம் உறுதி செய்த தரவுகளை மட்டும் இங்கே தொகுத்து இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம்.
பிபிசியின் கள ஆய்வை படிக்க - பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: ‘எனக்கு முன்பே தெரியும்’ என்கிறார் 'பார்' நாகராஜ்
சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு - இந்து அமைப்பு உறுப்பினர் உள்பட அனைவரும் விடுதலை
சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் இந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 68 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் குடிமக்கள்.
இந்திய எல்லையில் கடைசியாக அமைந்துள்ள அட்டாரி ரயில் நிலையத்தை நோக்கிச் சென்ற இந்த ரயில் பஞ்ச்குலாவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானிய இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நிகழ்ந்தபட்டது என தேசிய புலனாய்வு முகமை கூறியிருந்தது.
நீரவ் மோதி லண்டனில் கைது - இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பிரிட்டன் நடவடிக்கை
இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து தப்பிச்சென்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தொழில் அதிபர் நீரவ் மோதி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் போலீசார் கூறியுள்ளனர்.
இந்திய அமலாக்கத்துறையினரும் அந்த செய்தியைத் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Twitter
மத்திய லண்டனில் ஹால்பன் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 29 அன்று நடக்கவுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நீரவ் மோதி பிணைக்கு விண்ணப்பித்தார். எனினும் அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் படிக்க - லண்டனில் கைதான வைர வியாபாரி நீரவ் மோதியின் பிணை மனு நிராகரிப்பு
''ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த திருச்சி மக்களவை தொகுதி''
தொகுதி மறுசீரமைப்பு பணிக்கு பிறகு ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது திருச்சி மக்களவை தொகுதி.

பட மூலாதாரம், Samuel Bourne
திருச்சியைப் பொருத்தவரையில் பல்வேறு கட்சிகளும் இங்கே களம் கண்டுவென்றுள்ளன. திமுக ஒருமுறை மட்டுமே திருச்சி தொகுதியை வென்றுள்ளது. 2009 மக்களவை தேர்தலுக்கு பின் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி தொகுதியை தனது வசம் வைத்திருக்கிறது அதிமுக.
திருச்சியில் அடைக்கலராஜ் அதிக முறை வென்ற நபராவார். சுமார் நான்கு முறை அவர் திருச்சியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1991 தேர்தல் வரை திருச்சியில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்திருந்திருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகள்.
இம்முறை திமுக கூட்டணியில் திருச்சி மக்களவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
திருச்சி மக்களவை தொகுதியின் வரலாற்றை இங்கே படிக்கலாம். - ''ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த திருச்சி மக்களவை தொகுதி''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












