ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸ்கர் பாகிஸ்தானில் இருக்கிறார் - குரேஷி

மசூத் அஸ்கர்

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸ்கர் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதை அந்நாட்டின் வெளியுறவு செயலர் ஷா மஹ்மூட் குரோஷி ஒப்புக்கொண்டுள்ளார்.

காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் வேளையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூட் குரோஷி சிஎன்என் பத்திரிகையாளர் கிறிஸ்டைன் அமன்பூருக்கு அளித்த பேட்டியில் மசூத் அஸ்கருக்கு பாகிஸ்தானில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

அஸ்கர் பாகிஸ்தானில் இருந்தால், அரசு அவரை கண்காணிக்குமா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "அஸ்கர் பாகிஸ்தானில்தான் உள்ளார். எனக்கு கிடைத்த தகவலின்படி, அவருக்கு உடல்நலமில்லை. வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவு உடல் நலமின்றி அவர் இருக்கிறார்" என்று குரோஷி பதிலளித்தார்.

பாகிஸ்தான் நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அஸ்கர் பற்றி ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் இந்தியா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மசூத் அஸ்கர்

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14ம் தேதி இந்தியாவின் சிஆர்.பிஎஃப் படையினர் சென்று கொண்டிருந்த வாகன தொடரணியில் வெடிப்பொருட்களை நிரப்பி வந்த கார் கொண்டு தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40க்கு மேலான இந்திய படையினர் பலியாயினர்.

இந்த சம்பவம் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்த தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு அறிவித்தது.

இலங்கை
இலங்கை

இந்த தாக்குதலை நடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட மசூத் அஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது.

அற்கான உறுதியான சான்றுகள் கொடுக்க வேண்டுமென பாகிஸ்தான் கேட்க, இதுவரை கொடுத்தவற்றிற்கு என்ன செய்தீர்கள் என்ற கோபமான கேள்வியே இந்தியாவின் பதிலாக அமைந்தது.

மசூத் உருவாக்கிய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தீவிரவாத அமைப்பு என ஐ.நா அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் தலைவரை கறுப்பு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி இந்தியா ஐநாவில் முறையிட்டது.

ஆனால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த முயற்சியை தடுத்துள்ளது.

மசூத் அஸ்கரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். தீவிரவாதி அல்லது தீவிரவாத அமைப்பை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு சில வரைமுறைகள் உள்ளன.

மேலும், மசூத் அஸ்கருக்கு எதிராக எதாவது ஆதாரத்தை இந்தியா கொடுக்குமானால், அதன் பின்னர், இதுபற்றி ஆலோசிக்கலாம் என்று சீனா தெரிவித்திருக்கிறது.

மசூத் அஸ்கரை பற்றி விரிவாக அறிந்துகொள்ள கீழ்காணும் பக்கத்தை வாசிக்கலாம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: