போப் பிரான்சிஸ்: "ஒரு பாலுணர்வு வேரூன்றியவர்களுக்கு திருச்சபையில் இடமில்லை"

போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், Reuters

ஒருபாலுறவு என்பது தீவிரமான விஷயம் என்றும், உணர்வு ரீதியாகவும், மனிதத் தன்மையிலும் முதிர்ச்சி அடைந்தவர்களையே திருச்சபைக்குத் தேர்வு செய்யவேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

மதச் செயல்பாடுகள் குறித்து ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு மிஷனரி பாதிரியாருக்கு அளித்த நேர்க்காணலில் போப் பிரான்சிஸ் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஒரு பாலுறவு என்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது என்று கூறிய போப் பிரான்சிஸ், பிரம்மச்சரியத்தின் மீதான உறுதிமொழியை கடைப்பிடிக்க மதகுருக்களை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று, போப் பிரான்சிஸ் அளித்த நேர்க்காணலின் முக்கிய பகுதிகளை இத்தாலிய நாளேடு ஒன்று பிரசுரித்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

மதகுருக்களை தேர்ந்தேடுக்கும் தேவாலயங்கள் சரியான நபர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிரத்தை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"ஒருபாலுணர்வு வேறூன்றிய போக்கு கொண்ட நபர்களை திருச்சபை பணிகளுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டாம் என வத்திகான் வலியுறுத்துகிறது.”

இந்த கட்டுப்பாடுகள் கன்னியாஸ்திரியாக விரும்பும் பெண்களுக்கும் பொருந்தும் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :