சீன ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் பலி

பட மூலாதாரம், EPA
சீனாவின் வடக்கு பகுதியில் ரசாயன தொழிற்சாலைக்கு வெளியே ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பெய்ஜிங்கின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜாங்ஜியாகௌவில் உள்ள ரசாயன ஆலைக்குள் செல்லவிருந்த ரசாயனங்களை ஏற்றி வந்த வாகனம் வெடித்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், ஆலைக்கு வெளியே எரிந்த கார்களும் டிரக்குகளும் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Reuters
2022ஆம் ஆண்டு சீனா நடத்தும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சில போட்டிகளை ஜாங்ஜியாகௌவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 12 மணியளவில் நடைபெற்றுள்ளது. ஜாங்ஜியாகௌ நகரம் பெய்ஜிங்கின் வடமேற்கு பகுதியிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. 38 டிரக்குகள் மற்றும் 12 வாகனங்கள் தீயில் சேதமாகியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் ஆய்வு மற்றும் மீட்புபணிகளும், விபத்தின் காரணத்தை அறிவதற்கான புலனாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆலையில் உற்பத்திகள் நிறுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் அதீத பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் காணப்பட்டாலும், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் ரசாயன வெடிப்புகள் தொடர்பான சம்பவங்களால் அந்நாடு சிரமப்பட்டு வருகிறது என பிபிசி பெய்ஜிங் செய்தியாளர் ஸ்டீபன் மெக்டோனல் தெரிவிக்கிறார்.
இந்த வருடம் ஜூலை மாதம் சிச்சுவானில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்.
2015ஆம் ஆண்டு தியன் ஜின் நகரில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 173 பேர் கொல்லப்பட்டனர்.
ஊழல், அரசியல் தலையீடு மற்றும் அதிகாரிகளால் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுதல் ஆகிய காரணங்கள் விபத்துக்கு காரணமென அதிகாரபூர்வ விசாரணையில் தெரியவந்தது.
பிற செய்திகள்:
- "ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம்" - ஆய்வு செய்த நிபுணர் குழு அறிக்கை
- யுக்ரேன் - ரஷ்யா மோதல்: 'புதினுடனான சந்திப்பு ரத்தாகலாம் ' - டிரம்ப்
- 'சென்டினல் பழங்குடியினர் தேடித் தாக்க விரும்புவதில்லை'- நேரில் சென்றவரின் அனுபவம்
- 'கருவிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள்' - சிக்கலில் சீன விஞ்ஞானி
- பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது மித்தாலி ராஜ் அதிரடி குற்றச்சாட்டு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












