எரிமலை வெடிப்பு: ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு எழுந்த சாம்பல்

குவாடமாலாவில் உள்ள ஃபாய்கோ எரிமலை பகுதியில் உள்ள 4000 மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்பட தொகுப்பை இங்கே பகிர்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் அந்த பகுதியை சாம்பலும், புகையும் சூழ்ந்தது.

இதே பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால் 200 பேர் புதையுண்டனர். தீயணைப்பு படை வீரர்கள் மக்களை மீட்கும் பணியில் உதவினர்.

எரிமலை சீற்றத்தால் எழுந்த சாம்பல் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு படர்ந்துள்ளது.

இந்த எரிமலையின் உயரம் 12,250 அடி. இதற்கு மேல் 3,280 அடிக்கு படர்ந்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் எரிமலையில் ஃபாய்கோ எரிமலையும் ஒன்று.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :