செளதி அரேபியா நீதியை நிலைநாட்டுவதை கண்டு பெருமையடைகிறேன் - அரசர் சல்மான்

செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையில் செளதிக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசர் சல்மான் அந்நாட்டின் நீதித்துறையை பாராட்டியுள்ளார்.

ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து முதல் முறையாக பேசிய அரசர் சல்மான், தனது நாடு நீதியை வழங்குவதிலிருந்து என்றும் தவறியது இல்லை என்று தெரிவித்தார்.

செளதி அரேபியாவின் அரசு ஆலோசனை மன்றத்தில் அரசர் சல்மான் இந்த உரையை ஆற்றினார். இருப்பினும் கஷோக்ஜி கொலை தொடர்பாக அவர் நேரடியாக ஏதும் குறிப்பிடவில்லை.

செளதி அரசை கடுமையாக விமர்சனம் செய்துவந்த ஜமால், இஸ்தான்புல்லின் உள்ள செளதி தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் சிஐஏ, பட்டத்து இளவரசர் சல்மானின் ஆணையின் பேரிலே அந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்று தெரிவித்தது.

அனால் இந்த கொலைப்பற்றி தனக்கு ஏதும் தெரியாது என பட்டத்து இளவரசர் சல்மான் தெரிவித்திருந்தார்.

சிஐஏவின் விசாரணை முடிவுகள் பற்றி அமெரிக்கா முடிவு ஏதும் எடுக்கவில்லை

உளவுத்துறை அதிகாரியுடன் நடந்த கைகலப்பு ஒன்றில் ஜமால் கொல்லப்பட்டதாக செளதி தெரிவித்திருந்தது.

என்ன சொன்னார் சல்மான்?

"இந்த அரசு இஸ்மாலிய நீதி மற்றும் சமத்துவத்தின் கோட்பாடுபாடுகள்படி அமைக்கப்பட்டது. நீதி மற்றும் பொது விசாரணைகளுக்கு நாம் எடுக்கும் முயற்சி குறித்து நான் பெருமை அடைகிறேன்" என்றார்.

மேலும் 82 வயதான அரசர் சல்மான், "இறைவனின் நீதியை நிலைநாட்டிவதிலிருந்தும் நீதியை செயல்படுத்துவதிலிருந்தும் தவறாமல் இருப்போம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

வளைகுடாவில் தனது எதிரி நாடான இரானையும் அரசர் விமர்சித்தார்.

இரானின் அணு ஆயுத திட்டத்தை நிறுத்த சர்வதேச நாடுகள் முயற்சி செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் அதன் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மை மற்றும் ஏமனில் நடந்துவரும் போரை நிறுத்தும் ஐ.நாவின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவது ஆகியவை குறித்தும் சல்மான் உரையாற்றினார்.

யார் குற்றம் சுமத்துகிறது செளதி?

கடந்தவாரம் நாட்டிற்கு திரும்ப கஷோக்ஜியை இணங்கச் செய்யும் பணி வழங்கப்பட்ட ஒரு உளவுத்துறை அதிகாரி மீது செளதியின் அரச வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுவரை கொலை தொடர்பாக மொத்தம் 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையில் அமெரிக்காவில் நிலை என்ன?

இந்த கொலையில் பட்டத்து இளவரசர் சல்மானுக்கு நேரடி தொடர்பு இருக்கும்படியான ஆதாரங்கள் எதையும் சிஐஏ வழங்கவில்லை எனினும் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஆனால் சனிக்கிழமையன்று ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பாக விடை தெரியாத பல கேள்விகள் உள்ளதால் இதில் இறுதி முடிவை அமெரிக்கா எட்டவில்லை என அந்நாட்டின் உள்துறை அமைச்சக்கம் தெரிவித்துள்ளது.

சிஐஏவின் விசாரணை குறித்து டிரம்ப் அதனிடம் பேசியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸின் நேர்காணல் சிஐஏவின் கண்டுபிடிப்புகள் வெளியான செய்திக்கு முன்னதாக எடுக்கப்பட்டது.

டிரம்பின் கூட்டாளியான குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சி கிராஹாம், டிரம்ப் சல்மானின் மறுப்பை நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் சேர்ந்து செளதி அரேபியாவுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

இருப்பினும் திங்களன்று ஜெர்மன் செளதிக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :