'நிலம், ஒளி, ரத்தம்' - முதலாம் உலகப் போரின் எச்சங்கள்

நிலமும், காலமும் முதற்பொருள் என்கிறது தொல்காப்பியம். ஒளியை காலம் நிர்ணயக்கிறது. ஒளி நிலத்தின் மீது சிதறி நமக்கு வெவ்வேறு காட்சியின் தரிசனத்தை தருகிறது. எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே. அதுபோல, காணும் காட்சியாவும் ஒளி குறித்தனவே.

ஒளியிடம் எந்த வேற்றுமைகளும் இருப்பது இல்லை. முன்பொரு காலத்தில் போர் நடந்த இடத்தில் படர்ந்த ஒளி அதே இடத்தில் படர்ந்திருக்கிறது. ஆனால், இப்போது அதே நிலமும், ஒளியும் வேறு உணர்வை கடத்துகின்றன.

முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் இந்தச் சூழலில், போர் நடந்த இடத்தில் மிச்சமுள்ள தடயங்களை புகைப்படங்களாக காட்சிப்படுத்துகிறார் ஜொனாதன் பீமிஷ்.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் பகுதியில் போர் நடந்த முக்கிய இடங்களுக்கு பயணித்து ஜோனாதன் புகைப்படம் எடுத்துள்ளார்.

பல இடங்கள் இன்னும் போரின் வடுக்களை சுமந்து இருக்கின்றன என்கிறார் ஜொனாதன்.

இவை அனைத்தையும் இன்ஃப்ராரெட் புகைப்படங்களாக பதிவு செய்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :