You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'போலிச் செய்தி’ என்ற சொல்லாடல் எப்போது தொடங்கியது? #BeyondFakeNews
போலிச் செய்திகளை என்ற வார்த்தை தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அப்படி என்றால் என்ன?
போலிச் செய்திகள் என்ற பதத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் 2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
இளைஞர்கள்
மெஸிடோனியாவின் இளைஞர்கள் சிலர், ஃபேஸ்புக் வழியாக போலிச் செய்திகளை பரப்புவதாக, அமெரிக்க இணையவழி ஊடகமான Buzfeed கண்டுபிடித்தது.
அந்த இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த தகவல் இவ்வாறானதாக இருந்தது.
"உலகத்தை அதிர்ச்சியடைய செய்த போப் ஃபிரான்சிஸ். டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு"
ஆனால், அந்த பதின்ம வயது இளைஞர்களுக்கு இதன் பின்னால் உள்ள அரசியல் எல்லாம் அவ்வளவாக தெரியவில்லை. அவர்களுக்கு தேவை இதை செய்வதன் மூலமாக வரும் விளம்பர பணம் மட்டுமே.
அப்போதில் இருந்து அமெரிக்க அரசியல் பற்றிய செய்திகள் வைரலாகின. தேர்தலுக்கு பிறகு, இந்த 'போலிச் செய்திகள்' என்ற சொல்லாடல் பிரபலமானது.
போலிச் செய்திகள் எனும் கோட்பாடு
தவறான தகவல், விளையாட்டுக்காக ஒரு செய்தியை பரப்புவது, சதி கோட்பாடுகள், இதெல்லாம் "போலிச் செய்திகள்" என்ற ஒற்றை வார்த்தைக்குள் வந்தது.
சில மாதங்களுக்கு பின்னர், தங்களுக்கு பிடிக்காத செய்தி நிறுவனங்களை தாக்க, இந்த சொல்லை டொனால்ட் டிரம்ப் மற்றும் பலர் பயன்படுத்த தொடங்கினார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :