You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாக்கும் கிளர்ச்சியாளர்கள், துரத்தும் ‘இபோலா’ : 200 பேர் பலி - என்ன நடக்கிறது காங்கோவில்?
காங்கோ ஜனநாயக குடியரசில் ஆபத்தான இபோலா வைரஸ் பரவியதில் 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்கின்றனர் அதிகாரிகள்.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெனி நகரத்தை சேர்ந்தவர்கள். எட்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரம் வட கிவு பகுதியில் அமைந்துள்ளது என்று தேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏறத்தாழ இருபத்து ஐந்தாயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலிலும், ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மருத்துவ குழுக்களை தாக்குவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஒலி இலுங்கா தெரிவிக்கிறார்.
அரசியல் கொந்தளிப்பு மிகுந்த காங்கோவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
ஜுலை மாதம் முதல் இந்த இபோலா வைரஸானது பரவி வருகிறது. 1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பத்து முறை இபோலா வைரஸ் தாக்கி இருக்கிறது.
இதுவரை 291 பேர் இபோலாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும், அதில் 201 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.
சுகாதார பணியாளர்களை தாக்க வேண்டாமென ஐ.நா அமைதிகாப்பாளர்கள் ஆயுத குழுக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :