You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நைஜீரியா: அடிக்கடி நடக்கும் மதக்கலரவம், 55 பேர் பலி
நைஜீரியாவில் வடக்கு கடுனா மாகாணத்தில் உள்ள கடைவீதி ஒன்றில் வெவ்வேறு மத நம்பிக்கை உடைய இருதரப்புக்கிடையே நடந்த சண்டையில் 55 பேர் மரணித்ததாக அதிபர் முஹமத் புஹாரி தெரிவித்துள்ளார்.
கசுவான் மகானி நகரத்தில் சுமை தூக்குபவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ இளைஞர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டு கொண்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவேறு மதத்தினர், இனக்குழுவின் உள்ளிட்டோர் இடையே நைஜீரியாவில் அடிக்கடி மோதல்கள் உண்டாகி வருகின்றன.
22 பேர் கைது
இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் அடிக்கடி இருதரப்புக்கு இடையே சண்டை நடந்து வருகிறது.
எந்த மதமும் வன்முறையை ஆதரிப்பது இல்லையெனவும், நாட்டின் வளர்ச்சிக்கு அமைதியும் இணக்கமும் தேவை என அதிபர் புஹாரி கூறியதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சகிப்புதன்மையை ஊக்கிவிக்கும் பணியில் மதத்தலைவர்கள் ஈடுப்பட வேண்டுமென்றும் அதிபர் கூறி உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :