ஜமால் கசோஜி: சௌதி தூதரகத்தில் காணாமல் போனவரை காட்டுக்குள் தேடும் துருக்கி போலீஸ்

பட மூலாதாரம், EPA
சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
கசோஜியின் உடல் எங்கே?
துருக்கியில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு சென்றபின்னர் மாயமான சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜியின் உடலை அருகில் உள்ள காடு மற்றும் விளைநிலத்தில் துருக்கி காவல்துறை தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் துணைத் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக துருக்கி கூறியுள்ளது.
அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என சௌதி அரசு கூறியுள்ளது.

தாலிபன் தாக்குதல்

பட மூலாதாரம், AFP
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் நகரின் காவல் துறை தலைவர் ஜெனெரல் அப்துல் ராஜிக் அவரது பாதுகாவலர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தாலிபன் பொறுப்பேற்றுள்ளது. உள்ளூர் உளவுப் பிரிவுத் தலைவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மாணவிக்கு அனுமதி

பட மூலாதாரம், Reuters
இஸ்ரேலை புறக்கணிக்க பிரசாரம் செய்து வந்த அமெரிக்க மாணவி இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பாலத்தீனத்தை பூர்வீகமாக கொண்ட லாரா அல்காசெம் எனும் அம்மாணவி படிப்புக்காக இஸ்ரேல் விசா பெற்றிருந்தார்.
அவர் இப்போது எந்த பிரச்சாரத்திலும் ஈடுபடுவதில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












