You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிங்கப்பூர் - அமெரிக்கா: 19 மணிநேரம், 15 ஆயிரம் கி.மீ. - புதிய அனுபவம் தரும் பயணம்
கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
இடைநில்லா பயணம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா செல்லும் இடைநில்லா விமான சேவையை மீண்டும் தொடங்கி உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதிக செலவு பிடிப்பதாக இருக்கிறது என்ற காரணத்திற்காக நிறுத்தப்பட்ட இந்த விமான சேவையை புதுப்பித்துள்ளது. 19 மணிநேரத்தில் 15 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை இது கடக்கும். இதுவே இப்போது அதிக தூரம் பயணிக்கும் இடைநில்லா விமான சேவையாகும் .
ஜமாலுக்கு என்ன ஆனது?
செளதி அரேபியாவின் உயர் அதிகாரிகளுடன் காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோஜி குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். செளதி முடியரசை தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த ஜமால், தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார்.
விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகத்தான் அவர் துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரை காணவில்லை. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அவர் குறித்து கேள்வி எழுப்பி வரும் சூழலில் டிரம்பும் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். "பத்திரிகையாளர்களுக்கு, ஏன் யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படுவதை நாம் அனுமதிக்க முடியாது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு தண்டனை
மாசுப்பட்ட ஏரி ஒன்றை தூய்மைப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்த குற்றத்திற்காக கெளதமாலா முன்னாள் துணை அதிபரு ரோக்ஸானாவுக்கு 15 ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏரியை தூய்மைபடுத்துவதற்காக திறனற்ற வேதி பொருட்களை பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார் என குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த முறைகேட்டில் எந்த அரசு பதவிகளையும் விகிக்காத அதிபரின் சகோதரருக்கும் தொடர்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அவருக்கும் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கூறப்படும் மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் வீசிய மைக்கேல் சூறாவளி புதன்கிழமை பகலில் கரையை கடந்தது.
மரமொன்று விழுந்ததில் ஒருவர் இறந்துள்ளதாக புளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியான மைக்கேல் மேலும் நகர்ந்து அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் வீடியோ
பிரான்சில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்று பார்வையற்ற ஒருவரையும், அவரின் வழிகாட்டியான நாயையும் கடையிலிருந்து அப்புறப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்தர் தனது நாய் லோயாவுடன் பல்பொருள் அங்காடிக்கு சென்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினால். அதில் அவரை சுகாதார காரணங்களுக்காக வெளியே செல்ல சொல்லும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவானது மூன்றாம் நபரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :