You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"விமான நிலைய பாதுகாப்பில் சிரிக்க வேண்டாம்" மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு
இந்தியாவில் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலிஸார் குறைவாக சிரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிக உத்வேகத்துடன் காணப்பட்டால் அது, தளர்வான பாதுகாப்பு என்ற கருத்துக்கும், பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் வித்திடும் என கவலைகள் எழுந்துள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விமான பாதுகாப்புக்கான பொறுப்பில் இருக்கும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, "தங்களின் ஊழியர்கள் சிரித்த முகத்தைக்காட்டிலும், விழிப்புடன் இருக்க வேண்டும் என விரும்புவதாக" தெரிவித்துள்ளது.
அதிகமாக சிரிப்பதில் இருந்து, போதுமான அளவு மட்டுமே இனி அவர்கள் சிரிப்பார்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபடியான நட்புத்தன்மையுடன் இருந்தால் விமான நிலையம் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்துக்கு வித்திடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"பயணிகளிடம் இலகுவாக பழகுவதில் அதிக நம்பிக்கைக் கொண்டதால்தான் 9/11 தாக்குதல் நடைபெற்றது" என அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனிரல் ராஜேஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய போலிஸ் அதிகாரிகள் தங்களது நடவடிக்கைகளை மாற்ற வேண்டும் என கோரப்பட்டது இது முதல்முறையல்ல
- ஜூலை மாதம், உடல் எடையைக் குறைக்காவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவதாக கர்நாடகாவின் ரிசர்வ் போலிஸ் துறை அறிவித்தது.
- 2004ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் போலிஸாருக்கு பெரிய மீசை வளர்க்க பணம் வழங்கப்பட்டது. பெரிய மீசையுடன் காணப்பட்டால் அதிக கம்பீரத்துடன் தெரியலாம் என்பதே அதற்கான காரணமாக கூறப்பட்டது.
ஆனால் இதற்கு நேர்மறையாக 2014ஆம் ஆண்டு நேபால் போலிஸ் துறை அதிகாரிகள் இலகுவாக பழக, அவர்களுக்கு பயிற்யளிக்க 600 பயிற்சியாளர்கள் பணிக்கு எடுக்கப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்