பாகிஸ்தானில் இருந்து சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் வெளியேற உத்தரவு

Pakistan

பட மூலாதாரம், EPA

    • எழுதியவர், சிக்கந்தர் கெர்மானி
    • பதவி, பிபிசி

சர்வதேச தொண்டு நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

பாகிஸ்தானின் இப்புதிய உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான 'ஆக்சன் எய்ட்' (Action Aid) , ''பாகிஸ்தானின் பொதுச் சமூகம் மீதான சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கவலைகளை இம்முடிவு அதிகரிக்கிறது'' எனக் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இலங்கை
இலங்கை

ஆனால் 'ஆக்சன் எய்ட்' நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தை பிபிசி பார்த்தது. அதில் அந்நிறுவனம் பாகிஸ்தானின் தொண்டு நிறுவன வேலையை தொடர, பதிவு செய்வதற்காக ஆறு மாத காலத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டை விட்டு பதினெட்டு தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படுவதாக ஆக்சன் எய்ட் நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பாகிஸ்தானில் கருத்து சுதந்திரத்திற்காக பிரசாரம் செய்பவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலைகள் அதிகரித்து வந்த நிலையில் அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

ஒசாமா பின்லேடனை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் சிஐஏ நிறுவனம் ஒரு போலியான தடுப்பூசி திட்டத்தின் பேரில் நாட்டுக்குள் நுழைந்து செயல்பட்டு வந்தது 2011-ல் கண்டறியப்பட்டபிறகு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மீதான பாகிஸ்தான் உளவுத்துறையின் சந்தேகங்கள் அதிகரித்து வந்தது.

முன்னதாக 'சேவ் தி சில்ரன்' (Save The Children) நிறுவனம் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

ஒசாமா பின்லேடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒசாமா பின்லேடன்

ஆக்சன் எய்ட் மற்றும் சில சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறவேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மேற்குலக அரசுகளின் அழுத்தம் காரணமாக அந்நிறுவனங்கள் தொடர்ந்து பாகிஸ்தானின் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொண்டு நிறுவனங்கள் அரசின் முடிவு குறித்து மேல் முறையீடு செய்தன.

ஆக்சன் எய்ட் மற்றும் பிளான் இன்டர்நெஷனல் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தற்போது அரசிடம் இருந்து கடிதம் கிடைத்துள்ளதாகவும் தங்களது மேல் முறையீடு தோல்வியடைந்துள்ளதாகவும் ஆனால் அதற்கான காரணங்களை அரசு விளக்கவில்லை என்றும் உறுதி செய்திருக்கின்றன.

இலங்கை
இலங்கை

ஆக்சன் எய்ட் நிறுவனத்தின் பாகிஸ்தானுக்கான செயல் இயக்குநர் அப்துல் காலிக் பிபிசியிடம் பேசுகையில் ''இனி மேல் அரசுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இல்லை என்பதை குறித்து கொண்டுள்ளதாகவும்.ஆனால் தொண்டு நிறுவனங்களுடன் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான ஒதுக்கப்பட்ட மக்கள் குறித்து கவலை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிளான் இன்டர்நேஷனல் (Plan International) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் பாகிஸ்தானில் 1.6 மில்லியன் குழந்தைகளுக்கு தாங்கள் ஆதரவு வழங்கிவந்ததாகவும் அரசின் இம்முடிவு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :