You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘பழிவாங்கல்’ வேண்டாம்: பாலியல் குற்றச்சாட்டும், அதிபர் டிரம்ப் கருத்தும்
தாம் நியமித்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து எஃப்.பி.ஐ விரிவான விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால், 'பழிவாங்கல்' வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணையை வெள்ளை மாளிகை முடக்க பார்க்கிறது என அமெரிக்க ஊடகங்கள் முன்பு தெரிவித்தன.
ஆனால், இந்த விவாகாரத்தில் எஃப்.பி.ஐ-க்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதே நேரம் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார் டிரம்ப்.
முக்கிய சாட்சி
நீதிபதி பிரெட் கவனோவின் நண்பர் மார்க்கை விசாரணை அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மார்க்கின் வழக்கறிஞர், "இன்னும் விசாரணை முடியவில்லை" என்று கூறினார்.
நீதிபதி பிரெட் கவனோவின் இளம்வயது நண்பர் மார்க்.
பேராசியர் கிரிஸ்டின் நீதிபதி பிரெட் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி உள்ளார். இந்த விவகராத்தில் மார்க்கின் சாட்சியம் மிக முக்கியமான ஒன்றாகும்.
மறுப்பு
தமக்கு 15 வயது இருந்த போது, 1982 ஆம் ஆண்டு பிரெட் கவனோ தம்மை பாலியல் வல்லுறவு செய்ததாக கூறி உள்ளார். அப்போது பிரெட்டுக்கு 17 வயது
பேராசியர் கிரிஸ்டின் மட்டுமல்ல பல பெண்கள் பிரெட் கவனோ மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி உள்ளனர். அவர்களை எஃப்.பி.ஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பிரெட் மறுக்கிறார்.
இளம் வயதில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது குறித்த குற்றச்சாட்டுகள் அமெரிக்க அரசியலை உலுக்கி எடுக்கத் தொடங்கியதை அடுத்து பல பெண்கள் தங்களுக்கு சிறுவயதில் நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பொதுவெளியில் பேசத் தொடங்கி உள்ளனர்.
பத்மலஷ்மி
16 வயதில் தாம் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் பத்மலக்ஷ்மி கூறினார்.
'' சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே ஓர் ஆண் என்னை பாலியல் வல்லுறவு செய்தார்'' என அதில் எழுதியுள்ளார் பத்மலக்ஷ்மி.
ஆனால் அவர் குற்றம்சாட்டும் அப்பாலியல் தாக்குதல் நிகழ்ந்த பிறகு, அதற்கு காரணம் அவரேதான் என வருத்தப்பட்டிருக்கிறார். பிறகுதான் பெண்கள் ஏன் பாலியல் தாக்குதலுக்கு ஆளான சம்பவங்களை வெளியில் சொல்வதில்லை என புரிந்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
நீதிபதி பிரெட் கவனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க டொனால்டுக்கு டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கவனா குறித்து சில குற்றச்சாட்டுகள் கூறப்படும் வேளையில் இந்த கட்டுரையை எழுதியிருக்கிறார் பத்மலக்ஷ்மி.
பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக நீதிபதி பிரெட் கவனா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள இரண்டு பெண்கள் மீதும் சந்தேகம் கொண்டிருக்கிறார் அதிபர் டிரம்ப்.
1980களில் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட சம்பவமொன்று நடந்ததாக அப்பெண்கள் குற்றம்சாட்டிய நிலையில், அவற்றை திரும்பத் திரும்ப வலுவாக மறுத்துவருகிறார் கவனா.
விரிவாகப் படிக்க:16 வயதில் நடந்த பாலியல் தாக்குதல் பற்றி அமைதி காத்தது ஏன்? அமெரிக்க தொகுப்பாளர் பத்மா விளக்கம்
''ஃபோர்ட் எனும் பெண்மணி சொல்வது உண்மையாக இருந்தால் அவர், பல வருடங்களுக்கு முன்பே காவல்துறையை அணுகியிருக்க வேண்டும் என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். ஆனால் குற்றம்சாட்டிய இரு பெண்கள் இவ்விஷயத்தை ஏன் பல வருடங்களாக வெளியில் சொல்லமாலும் குறிப்பாக காவல்துறையை அணுகாமலும் இருந்தார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஏனெனில் நானும் இதே விஷயத்தை செய்திருக்கிறேன்'' என எழுதியுள்ளார் லக்ஷ்மி.
அதுபோல, இளம் வயதில் தாம் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கெல்லயன் கான்வாய் கூறி உள்ளார்.
சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், இவ்வாறாக கூறி உள்ளார். இப்போது கான்வாய்க்கு 51 வயதாகிறது. முன்னதாக அவர் தன்னை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறி இருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :