'பெண் அரசியல்வாதிகளும், அவர்களது குழந்தைகளும்'

பணிக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் கைகுழந்தைகளையும் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கு அழைத்து செல்வது அரிது. அதற்கான சூழலை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்படுத்தி தருவதில்லை. அதுவும் பெண் அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ அழைத்து செல்வது என்பது அரிதினும் அரிது.

ஆனால், இப்போது சர்வதேச அளவில் தங்கள் குழந்தைகளை பணி செய்யும் இடத்திற்கு பெண் அரசியல்வாதிகள் அழைத்து செல்லும் நிகழ்வு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

அப்படியான சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

ஐ.நா சபைக்கு தம் குழந்தையை அழைத்து சென்ற முதல் தலைவர் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆவார். தமது மூன்று மாத குழந்தையை அழைத்து சென்றிருக்கிறார்.

பிரிட்டனில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொ சுவின்சன் தம் குழந்தையை நாடாளுமன்றத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். இவர்தான் குழந்தையை ஹவுஸ் ஆஃப் காமன்ஸுக்கு அழைத்து சென்ற முதல் நாடாளுமன்ற உறுப்பினர். பாராளுமன்றத்தை நவீனமாக இந்த நிகழ்வு சமிக்ஞை தருமென்று தாம் நம்புவதாக கூறியுள்ளார் அவர்.

மே 2017 -இல் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் செனட்டர் லரிஸா தம் குழந்தை அலியா ஜாய்க்கு தாய்ப்பால் ஊட்டினார்.

சுவீடனில் எம்.பி ஜெய்ட் தம் குழந்தையை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்த சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது.

ஸ்பெயினில் பொடிமஸ் கட்சியை சேர்ந்த கரோலினா ஜனவரி 2016ஆம் ஆண்டு தம் குழந்தையை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தார். அவர் நாடாளுமன்றத்தில் தம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியது விமர்சிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :