இந்தியாவிலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் புறப்பட்ட கப்பலுக்கு என்ன ஆனது?

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

நூற்றாண்டின் கண்டுபிடிப்பு

போர்ச்சுகல் கடல் பகுதியில் 400 ஆண்டு பழமையான கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுப்பிடித்துள்ளனர். இதனை ஒரு தொல்பொருள் அறிஞர் `இந்த தசாப்தத்தின் கண்டுபிடிப்பு' என்று வர்ணித்துள்ளார். இந்த கப்பலானது 1575 - 1625 ஆகிய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து மிளகு, கிராம்பு உள்ளிட்ட மசாலா மற்றும் நறுமண பொருட்களை ஏற்றிக் கொண்டு திரும்ப சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சிரியா ஏவுகணை

சிரியாவுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா அனுப்ப திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் சிரியா படைகள் இஸ்ரேல் வான் தாக்குதலின் போது தவறுதலாக ரஷ்ய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது குறிப்பிடதக்கது. இந்த சூழ்நிலையில் ரஷ்யா இப்படியான முடிவை எடுத்திருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்கள் இந்த எஸ் 300 பாதுகாப்பு எவுகணைகள் வழங்கப்படும்.

குடியேறிகளுக்கு எதிராக

இத்தாலி அரசாங்கம் குடியேறிகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றி உள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக இனி சுலபமாக தங்கள் பகுதியிலிருந்து குடியேறிகளை இத்தாலி வெளியேற்றிவிட முடியும். குறிப்பாக பாலியல் வல்லுறவு, கொலை உள்ளிட்ட கடுங்குற்றத்தில் ஈடுபடுபவர்களை எந்த விசாரணையும் இல்லாமல் வெளியேற்றிவிட முடியும். முன்னதாக, இப்படி வெளியேற்றுவது சுலபமான ஒன்றாக இல்லை.

இருபது பேர் கைது

இரான் உளவு அமைச்சகம், அண்மையில் ராணுவ அணிவகுப்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் தொடர்புடைவர்கள் என 22 பேரை கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து ஆயுதங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறி உள்ளது. முன்னதாக, அமெரிக்க ஆதரவு பெற்ற வளைகுடா நாடுகள்தான் தாக்குதலுக்கு காரணம் என அதிபர் ருஹானி தெரிவித்திருந்தார். ஆனால், இதனை மறுத்த அமெரிக்கா, எந்த தீவிரவாத தாக்குதல்களையும் அமெரிக்கா வன்மையாக கண்டிக்கும் என்று கூறி இருந்தது.

டிரம்புடன் பேச்சுவார்த்தையில் துணை அட்டார்னி ஜெனரல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட துணை அட்டார்னி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன், டிரம்புடன் அவசர நிலை பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் குழு ரஷ்யவுடன் தொடர்பு வைத்திருந்தது குறித்த விசாரணையை மேற்பார்வையிடும் ரோசன்ஸ்டைன் மற்றும் டிரம்ப் திங்களன்று ஏற்கனவே பேச்சுவார்த்தையை நடத்தினர்.

தற்போது ரோசன்ஸ்டைன் பணியில் தொடர்வது குறித்த சந்தேகங்களுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

வியாழனன்று நடைபெறவிருக்கும் அந்த சந்திப்பு எதிர்காலம் குறித்து தீர்மானிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :