ஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி; ஆஸ்திரேலிய மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஸ்ட்ராபெரி

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததையடுத்து, பொதுமக்கள் அதனை கடித்து அப்படியே உண்ணாமல், வெட்டி உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவுத் வேல்ஸ், கியுன்ஸ்டான்ட் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

அவ்வாறு ஊசி இருந்த ஒரு பழத்தை உண்ட நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இது போன்ற பழத்தை ஒன்பது வயது சிறுவன் ஒருவனும் உண்டிருக்கிறான். ஆனால், ஊசியை விழுங்கவில்லை.

அப்போதில் இருந்து பலதரப்பட்ட ஸ்ட்ராபெரி ப்ராண்டுகள் விற்பனையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன.

இந்நிலையில், ஸ்ட்ராபெரி பழங்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தனது நண்பர் ஒருவர் ஏசி ஏற்றப்பட்டிருந்த பழத்தை உண்டதால் கடுமையான வயிற்று வலியில் துடித்ததாக, ஜோஷ்வா என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

ஜோஷ்வா

கியுன்ஸ்லான்ட் சுகாதாரத்துறை இது தொடர்பாக பதிவிட்டுள்ள ட்வீட்டில், அடுத்த அறிவிப்பு வரும் வரை, மக்கள் வாங்கும் ஸ்ட்ராபெரி பழங்களை வெட்டி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

ஸ்ட்ராபெரி தொழிலானது ஆண்டுக்கு 130 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வருமானம் கொண்டது. இது போன்ற சம்பவங்கள் இத்தொழிலை நலிவடைய செய்யுமோ என்ற கவலை எழுந்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :