’ஒருதலைபட்சமாக’ நடந்து கொள்வதாக கூகுள் மீது டிரம்ப் புகார்

கூகுள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாக டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்

ஊடகங்களிடம் பேசும் டிரம்ப்.

பட மூலாதாரம், ALEX EDELMAN/AFP/Getty Images

படக்குறிப்பு, தொலைக்காட்சிக்கு எச்சரிக்கை.

`டிரம்ப் நியூஸ்` என்ற தேடல் வார்த்தைக்கு கூகுளில் ஒருதலைபட்சமான செய்திகள் வருவதாக தெரிவித்த டிரம்ப் அவர்ளை கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஒழுங்கு நடைமுறைகள் குறித்து நிர்வாகம் ஆலோசித்து வருவதாக டிரம்பின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கூகுள் தேடு தளம் அரசியல்சார்பற்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் எந்த ஒரு அரசியல் கட்சியின் கொள்கைக்கும் ஆதரவளிக்கவில்லை என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், "பலரை கூகுள் தங்களுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தி கொள்கிறது அது கடுமையாக கவனித்தக்க வேண்டிய விஷயம்" என்று தெரிவித்தார்.

மேலும் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் குறித்தும் பேசிய டிரம்ப், "அந்நிறுவனங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகபடியான புகார்கள் வருகின்றன" என தெரிவித்தார்.

ஆனால் எம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவிக்கவில்லை.

Presentational grey line

இதுகுறித்து டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகரிடம் கேட்ட போது, நிர்வாகம் இதுகுறித்து கவனித்து வருவதாகவும், அவை ஒழுங்குபடுத்த வேண்டுமா அல்லது சில விசாரணைகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டுமா என்று கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

`ஒடுக்கப்படுகிறோம்`

ஆய்வாளர்கள் டிரம்பின் புகார்களை வலுசேர்க்க சிறிய அளவிலான ஆதாரங்களே உள்ளது என்றும், மேலும் எம்மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சந்தையில் முன்னணியில் இருக்கும் கூகுள்

எதிர்மறையான செய்திகளையும், வலதுசாரி செய்திகளையும் கூகுள் முதன்மைப்படுத்துவதாக டிரம்ப் தனது டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் செய்திகள் ஒடுக்கப்படுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் குடியரசு/கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதாக கடந்த வாரம் தெரிவித்த டிரம்ப், "அதை நடக்கவிட மாட்டேன்" என தெரிவித்தார்.

ஆனால் தங்களது தேடல் விளைவுகளுக்கு அரசியல் பாரபட்சம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை கூகுள் மறுத்துள்ளது.

கூகுள்

பட மூலாதாரம், Reuters

"கூகுள் தேடல் விளைவுகளை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம் மேலும் அரசியல்சார்பு எண்ணங்களை விளைவிக்கும் விதமாக எங்கள் தேடல் இல்லை" என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் மெர்சீடிஸ் பன்ஸிடம் கேட்ட போது, "கூகுள் அரசியல் சார்புகளை எடுத்து தேடல் விளைவுகளை தருவது என்பது நம்ப முடியாத ஒன்று என தெரிவித்தார்."

"ஒரு நிகழ்வில் உள்ள செய்திகளும் அதன் தொடர்புகளை பொருத்தே செய்திகள் முன்னிலையில் வருவது போன்று கூகுள் தேடல் அமைப்பு வடிவகைப்பட்டுள்ளது"

"அதிகபடியாக மக்கள் பயன்படுத்தக்கூடிய வலைதளங்களுக்கு கூகுள் முன்னுரிமை கொடுக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :