கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி உதவி

ஐக்கிய அரபு அமீரகம் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக 700 கோடி ரூபாய் அளித்துள்ளதாக கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளா

பட மூலாதாரம், Getty Images

கேரளாவில் ஜூன் மாதத்திலிருந்து இதுவரை பெய்த பருவமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்து வரும் நிலையில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா முழுவதும் பலர் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் கேரளாவிற்கான தங்கள் நன்கொடையை அறிவித்துள்ளன.

இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பிரனராயி விஜயன் கேரளாவிற்கு நன்கொடை அளித்தவர்களின் தகவல்களை வெளியிட்டபோது ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அபு தாபியின் முடிக்குரிய இளவரசர் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியதாக தெரிவித்த அவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Presentational grey line
Presentational grey line

பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கு உதவி வரும் நிலையில் பிற நாடுகளும் உதவிக் கரம் நீட்டி வருவதாக முதல்வர் தெரிவித்தார்.

மேலும் சிறப்பு நிதியாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க 2600 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கோரப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

வளைகுடா நாடுகள் அனைத்து தரப்பிலும் தங்களுக்கு உதவி வருவதாகவும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் கேரளாவுக்கு எப்போதும் பங்குண்டு. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உண்டு என ஷேக் முகமத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்தியாவுடன் சேர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர் பக்ரித் பண்டிகையையொட்டி இந்தியாவில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு தாரளமாக உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

கேரளாவில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தை 'தீவிர பேரிடர்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :