ஆப்கானிஸ்தான் டியூஷன் சென்டர் மீது தற்கொலை தாக்குதல்: 48 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், டியூஷன் சென்டர் ஒன்றில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 67க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA
இந்த கல்வி மையத்திற்குள் நுழைந்த தற்கொலை குண்டுதாரி, அங்கிருந்து மாணவர்களின் மத்தியில் தான் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்தார் என்ற போலீஸ் கூறுகிறது.
இந்த சம்பவம் நடைபெற்ற கல்வி மையமானது தலைநகரில் ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடத்தில் அமைந்துள்ளது.
இந்த தாக்குதலை யார் மேற்கொண்டார் என்பது தெரியவில்லை. முன்னதாக ஐ.எஸ் குழுவினர் ஷியாக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அதிர்வுகளை ஏற்படுத்திவரும் ஆப்கான் பெண்கள் இசைக்குழு
பிபிசி தமிழின் அண்மை செய்திகள்
- கருணாநிதி மறைவு : அழகிரியின் அடுத்த திட்டம் என்ன?
- இலங்கை ராணுவத்தில் கீரிப்பிள்ளைகள்: வெடிகுண்டுகளை கண்டறிய உதவும்
- கேரள வெள்ளம்: முல்லை பெரியார் நீர்மட்டம் 142 அடி, 35 அணைகள் திறப்பு
- கேரள பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் (புகைப்படத் தொகுப்பு)
- "கொல்லப்பட்ட பிறகுதான் பாதுகாப்பு தருவார்களோ?" - உமர் காலித் #BBCSpecial
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













