இறந்து 60 ஆண்டுகளுக்குப் பின் அடையாளம் காணப்பட்ட பனிச்சறுக்கு வீர - சுவாரஸ்ய தகவல்

பட மூலாதாரம், Getty Images
அறுபது ஆண்டுகளுக்கு முன்னாள் இத்தாலியில் காணாமல் போய் பின் இறந்த பிரெஞ்சு பனிசறுக்கு வீரர் அடையாளம் காணப்பட்டார் என்கிறது இத்தாலி போலீஸ்.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட ஒரு கதை மூலம் அவர் குறித்த தகவல்கள் தெரிய வந்திருப்பதாக கூறுகிறது இத்தாலி போலீஸ்.
மனித எச்சம், கண்ணாடி, பனி சறுக்கு உபகரணங்கள்
இத்தாலி ஆஸ்தோ பகுதியில் உள்ள பள்ளதாக்கின் உயரமான பகுதியில் மனித எச்சங்கள், பனிசறுக்கு உபகரணங்கள் மற்றும் கண்ணாடி ஆகியவை 2005 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. இது குறித்த தகவல்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தனர் விசாரணை அதிகாரிகள். இதன் மூலமாக அவர்கள் காணாமல் போனவரை அடையாளம் கண்டுள்ளனர்.
ஒரு பிரெஞ்ச் குடும்பம் இது எங்களது உறவினர் ஹென்றி லி மாஸ்னியின் கண்ணாடியுடன் பொருந்துகிறது என்றது. இதனை தொடர்ந்து தடயவியல் சோதனை நடத்தப்பட்டது.
ஆப்ஸ் மலை
மனித எச்சம், கண்ணாடி மற்றும் பிற உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்ட ஆஸ்தோ பகுதியானது ஆப்ஸ் மலையில் உள்ளது. இவை அனைத்து சுவிஸ் எல்லை அருகே 10 ஆயிரம் அடி உயரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

பட மூலாதாரம், Getty Images
கண்டுக்கப்பட்ட துணிகளை வைத்து காணாமல் போன மனிதரின் உயரம் 1.75 மீட்டரு, அவரது வயது 30-உம் இருக்கலாம் என்று கணித்தனர். அது போல, அவரது மரணம் வசந்த காலத்தில் நேர்ந்து இருக்கலாம் என்கிறார் தடயவியல் துறையை சேர்ந்த மாரினெல்லா.
இந்தாண்டு ஜூன் மாதம் ஆஸ்தோ பள்ளதாக்கு காவல் துறை இந்த தகவல்களை சமூக உடகங்களில் பகிர்ந்து, இதனை பிரான்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளில் அதிகம் பகிரும்படி வேண்டுகோளையும் விடுத்திருந்தது.
பிரெஞ்சு ஊடகங்கள் இந்த செய்தியை அதிகளவில் வெளியிட்டன.
எங்கள் உறவினர்
இந்த செய்தியை கேட்ட எம்மா நாசீம் இது தங்கள் உறவினராக இருக்கலாம் என்று சந்தேகத்தை எழுப்பினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சுவிஸ் எல்லையில் உள்ள மேட்டர்ஹார்ன் பகுதியில் 1954 ஆம் ஆண்டு பனிசறுக்கு பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தங்கள் உறவினர் ஹென்றி காணாமல் போய்விட்டதாகவும், இப்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் அவரது அடையாளத்தோடு ஒத்துபோவதாக தெரிவித்தார் எம்மா நாசீம்.
ஒருவர் கண்ணாடி அணிந்து இருப்பதுபோல அந்த குடும்பம் அளித்த புகைப்படமானது தங்களிடம் உள்ள கண்ணாடியுடன் ஒத்துப்போகிறது. டி.என்.ஏ சோதனைக்குப் பின்னே முழு தகவல் தெரிய வரும் என்கின்றனர் போலீஸார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












