காற்று மாசு குறித்த ஆய்வுக்காக தமிழக விஞ்ஞானிக்கு தைவான் பரிசு

காற்று மாசு குறித்த ஆய்வுக்காக தமிழக விஞ்ஞானிக்கு தைவான் பரிசு

பட மூலாதாரம், Tangprize

பருவ நிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கிய இந்திய வம்சாவளி தமிழரும் சென்னையைச் சேர்ந்தவருமான வீரபத்ரன் ராமநாதன் உள்ளிட்ட இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் தைவானின் டாங் பரிசுக்கு தேர்வாகியுள்ளார்கள். இவர்களுக்கு தலா மில்லியன் டாலர் மதிப்பிலான பரிசு வழங்கப்படும்

காற்று மாசு குறித்து தமிழரான வீரபத்ரன் ராமநாதன் ஆய்வு செய்திருந்தார். மற்றொரு விஞ்ஞானி ஜேம்ஸ் ஹேன்சன், உலகளாவிய வெப்பமயமாதல் குறித்த எச்சரிக்கையை விடுத்து, அர்த்தமுள்ள நடவடிக்கையை வலியுறுத்தியதற்காக பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டதாக டாங் பரிசுக் குழு கூறியுள்ளது.

பேராசிரியர் வீரபத்ரன் ராமநாதன், சென்னையில் பிறந்தவர். பசுமைக் குடில்கள் மற்றும் காற்று மாசு தொடர்பான அடிப்படை புரிந்துணர்வில் வியத்தகு பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். குளோரைஃப்ளோரோ கரியமில வாயுக்களின் விளைவுகள் குறித்து முதன் முறையாக அவர்தான் சுட்டிக்காட்டினார். 1975-ஆம் ஆண்டிலேயே குளோரோஃபுளோரோ கரியமிலம் தொடர்பான வாயுவை குளிர்சாதனம் மற்றும் தயாரிப்பு துறைகளில் பயன்படுத்த அவர் யோசனை வழங்கியிருந்தார்.

இவரது ஆராய்ச்சியால்தான் புவி மண்டல பிரெளன் குளெவ்ட் என்றழைக்கப்படும் கருப்புநிற கரியமில வாயுவின் விளைவுகளையும் குணங்களையும் அறிய அறிவியல் உலகம் அறிய உதவியது.

பருவநிலை வெப்பமயமாதல் விளைவுகளில் இருந்து மக்களையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் காக்கும் நோக்குடன், தற்போது சூர்யா திட்டம் என்ற புதிய ஆராய்ச்சியில் விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன் ஈடுபட்டு வருகிறார்.

இவரும் ஜேம்ஸ் ஹேன்சனின் கண்டுபிடிப்புகளும், மனிதர்களின் குறிப்பிட்ட சில செயல்பாடுகள், பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலில் எத்தகைய ஆபத்துகளை விளைவிக்கலாம் என்பது குறித்து புரிந்து கொள்ள உதவியுள்ளன என்று டாங் பரிசு அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ஜென் சுவான் சென் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :