தாலிபனுடனான அமைதி உடன்படிக்கையை நீட்டித்தது ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம், Reuters
ரம்ஜான் விழாக்காலத்தை ஒட்டி தாலிபனுடன் ஏற்படுத்திக்கொண்ட தற்காலிக சண்டை நிறுத்த உடன்பாட்டை நீட்டிப்பதாக ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக்கொண்டு தாலிபன்கள் அமைதிப் பேச்சுவார்தைக்கு வர வேண்டுமென்று அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி வலியுறுத்தியுள்ளார்.
அசாதாரண நிகழ்வாக, தாலிபன் தீவிரவாதிகள் அங்குள்ள பாதுகாப்புப்படையினரை தழுவியதுடன், பொதுமக்களுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.
இருந்தபோதிலும், நாங்கர்ஹர் பகுதியில் தாலிபன்களும், அரசாங்க அதிகாரிகளும் கூடிய கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது கூட்டத்தில் பங்கேற்ற தாலிபன் தீவிரவாதிகளும் உயிரிழந்ததாகவும், மேலும் 54 பேர் காயமடைந்ததாகவும் அந்த பிராந்தியத்தின் செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், EPA
இந்நிலையில், தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு அறிவித்துள்ளது.
"தாலிபன்கள் முன்வைத்த அனைத்து பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து சமாதான பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடுவதற்குத் தயாராக உள்ளோம்" என்று அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த தற்காலிக சண்டை நிறுத்தத்தின் போது, தாலிபன் தீவிரவாதிகளுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் பெறுவார்கள் என்றும், சிறையில் உள்ள தாலிபன்கள், அவர்களது குடும்பங்களை காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர, இருதரப்பினர் இடையே அமைதிக்கான ஒப்பந்தம் மற்றும் அரசியல் தீர்வை எட்ட பணி புரிவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ கூறியுள்ளார்.
அசாதாரண நிகழ்வுகள்
அன்பரசன் எத்திராஜன், பிபிசி
தாலிபன் தீவிரவாதிகள் அங்குள்ள பாதுகாப்புப்படையினரை தழுவியது அங்கு ஒரு அசாதாரண நிகழ்வாகும். சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

பட மூலாதாரம், EPA
இந்நிலையில் இந்த நிகழ்வு நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த அமைதி போக்கு தொடங்க அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. ஏனெனில், ஆப்கான் தாலிபன் தலைவர்கள் பலர் அங்கு வாழ்வதாக நம்பப்படுகிறது.
எனினும், கடந்த காலத்தில் பாகிஸ்தானில் பல வன்முறை தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய எழுச்சியாளர்களுக்கு ஆப்கான் அடைக்கலம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












