முதல் முதலாய்...: உங்களுக்குத் தெரியுமா இந்த சாதனைப் பெண்களை?

பட மூலாதாரம், HARRY BENSON
அமெரிக்காவின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ மாகாணத்தின் முதல் கருப்பின மேயராக லண்டன் பிரீட் வெற்றிபெற்றுள்ளார். 43 வயதாகும் இவருடன் சேர்த்து தற்போது, அமெரிக்காவில் மொத்தம் 19 கருப்பின பெண் மேயர்கள் உள்ளனர்.
இவரைப் போலவே பல நாடுகளில் சாதித்த முதல் பெண்களின் பட்டியல் இதோ:
1. ஆசிய கண்டத்தின் முதல் பெண் பிரதமர்: சிரிமாவோ பண்டார நாயகா, இலங்கை (1960)
2.தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் - ஜானகி ராமச்சந்திரன் (1988)
3. இந்தியாவின் முதல் பெண் பிரதமர்: இந்திரா காந்தி (1966)
4. ஒரு இஸ்லாமிய நாட்டின் முதல் பெண் பிரதமர்: பெனாசீர் பூட்டோ, பாகிஸ்தான் (1988)
5 இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர்: மார்கரெட் தாட்சர் (1979)
6. இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி: ஃபாத்திமா பீவி (1989)
7. அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் நீதிபதி: ஜேன் போலின் (1939)
8. அமெரிக்க அதிபர் பதவிக்காக போட்டியிட்ட முதல் பெண்: விக்டோரியா உட்ஹல் (1872) - (அமெரிக்காவில் இன்னும் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
9. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி: பிரதீபா பாட்டில் (2007)
10. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்: சரோஜினி நாயுடு (உத்தரப்பிரதேச மாநிலம்) (1947)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












