அண்ணாந்து பார்க்கும் மாளிகை கட்டி... அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி...

புகைப்படக்கலைஞர் ஜானி மில்லர் தென்னாப்பிரிக்காவில் உள்ள நகரங்களில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ’டிரோன்’ கேமராக்கள் மூலம் முதலில் படம் பிடித்தார்.

பின்னர் மெக்சிகோ சிட்டி, மும்பை, நைரோபி, டெட்ராய்ட் உள்ளிட்ட உலகின் பிற நகரங்களையும் அவ்வாறே படம் பிடித்தார்.

டிரோன் மூலம் காட்சிப்படுத்தப்படும் புகைப்படங்கள் மூலம் நகரங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வை உணர முடிவதாக அவர் கூறுகிறார்.

"நமது சமூகத்தில் இருக்கும் சமத்துவமின்மை ஒளிந்து கிடக்கிறது. அதை தரையில் இருந்து பார்க்க முடியாது. நிலத்தில் உள்ள தடுப்புகள் நகரங்களில் நிலவும் அதீத பொருளாதார வேறுபாடுகளை பார்க்க விடாமல் செய்கின்றன," என்கிறார் அவர்.

Aerial photo of large colonial residences in Oyster Bay, South Africa and neighbouring poor settlement

பட மூலாதாரம், Johnny Miller/Millefoto

படக்குறிப்பு, ஒரு புறம் பசுமை நிறைந்த குடியிருப்புகள், மறுபுறம் நெரிசல் மிக்க குடில்கள். ஆய்ஸ்டர் பே, ஈஸ்டர்ன் கேப், தென்னப்பிரிக்கா.
Aerial shot of contrasting rich and poor neighbourhoods in Nairobi, Kenya.

பட மூலாதாரம், Johnny Miller/Millefoto

படக்குறிப்பு, கென்யா தலைநகர் நைரோபியில் சாலையோரம் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டடங்களும், அவற்றின் பின்னே மறைந்துள்ள வளர்ச்சியற்ற குடியிருப்பும்.
An aerial shot of Lake Michelle, a wealthy gated estate in Cape Town, South Africa, and a poorer community, Masiphumelele.

பட மூலாதாரம், Johnny Miller/Millefoto

படக்குறிப்பு, வலதுபக்கம் இருப்பது வசதி மிக்க லேக் மிஷேல் குடியிருப்பு. இடதுபக்கம் இருப்பது மசிபுமெலேலே எனும் ஏழைகளின் வாழ்விடம். கேப்டவுன், தென்னாப்பிரிக்கா.
Aerial shot showing contrasting rich and poor neighbourhoods in Santa Fe, Mexico City, Mexico.

பட மூலாதாரம், Johnny Miller/Millefoto

படக்குறிப்பு, ஒருபுறம் வளர்ச்சியின்மை, மறுபுறம் ஆடம்பர கட்டடங்கள். இரண்டுமே மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில்தான் உள்ளன.
Skyscrapers contrast with informal dwellings in Mumbai, India

பட மூலாதாரம், Johnny Miller/Millefoto

படக்குறிப்பு, மும்பை நகரின் அடுக்கு மாடிக் கட்டடங்களின் அருகே நீல நிற தார்பாலின்களை வைத்து மழையில் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் குடிசை வாசிகள்.
Aerial view of Kya Sands/Bloubosrand, Johannesburg, South Africa, showing a great disparity of wealth.

பட மூலாதாரம், Johnny Miller/Millefoto

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவின் ஜோஹனன்ஸ்பெர்க் நகரில் வளர்ச்சியையும் வறுமையையும் பிரிப்பது ஒரு சாலை மட்டுமே.
An aerial view of Detroit, Michigan, showing contrasting neighbourhoods

பட மூலாதாரம், Johnny Miller/Millefoto

படக்குறிப்பு, அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரின் சீரற்ற வளர்ச்சியை காட்டும் புகைப்படம்.

புகைப்படங்களின் காப்புரிமை ஜானி மில்லர் @Millefoto

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: