உலகப் பார்வை: 45 கோடிக்கு விலைபோன 300 ஆண்டுகள் பழைய, அரச குடும்பத்தின் அரிய வைரம்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சுமார் 45 கோடி ரூபாய்க்கு விலைபோன வைரம்

வைரம்

பட மூலாதாரம், EPA

ஐரோப்பியாவின் அரச குடும்பத்திடம் கடந்த 300 வருடங்களாக இருந்த அரிய வகை நீல வைரம், சுமார் 45 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் அரசர் பிலிப்பை, இளவரசி எலிசபெத் ஃபர்னீஸ் 1715-ம் ஆண்டு திருமணம் செய்தபோது இந்த நீல வைரம் பரிசாக அளிக்கப்பட்டது.

தொடரும் காஸா சோகம்

காஸா

பட மூலாதாரம், Getty Images

ஜெரூசலேத்தில் இஸ்ரேலுக்கான புதிய தூதரகத்தை அமெரிக்கா திறந்துள்ள நிலையில், காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 58 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேசுவோம்.. ஆனால் சுதந்திரம் கிடையாது

மரியானோ ரஜாய்

பட மூலாதாரம், Getty Images

கேட்டலோனியா பிராந்திய அரசைத் தலைமை ஏற்க தேர்ந்தேடுக்கப்பட்ட, கேட்டலோனியா சுதந்திரத்தை ஆதரிக்கும் தலைவரான க்விம் டோர்ராவை சந்திக்கத் தயாராக உள்ளதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கூறியுள்ளார்.

ஆனால், கேட்டலோனியா சுதந்திரத்திற்கு அனுமதிக்க முடியாது என ரஜாய் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் தடை

உக்ரைனில்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உக்ரைன் ராணுவத்தினர்

உக்ரைனில் நடக்கும் போரில் ரஷ்யாவின் பங்கு இருப்பதால், ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

உக்ரைனில் உள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதை ரஷ்யா நிறுத்துவதற்கான சிறு அறிகுறி தெரிவதாக உக்ரைன் அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: