உலகப்பார்வை: 8000 ஸ்டார்பக்ஸ் கடைகளை மூடிவிட்டு இன பாகுபாடுக்கு எதிரான பயிற்சி

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

8000 கடைகளை மூடிவிட்டு பணியாளார்களுக்குபயிற்சி

ஸ்டார்பக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

தனது பணியாளர்களுக்கு இன விழிப்புணர்வு குறித்து பயிற்சியளிப்பதற்காக, அமெரிக்காவில் உள்ள தனது 8000 கடைகளை அடுத்த மாதம் ஒரு நாள் பிற்பகல் நேரத்தில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மூட உள்ளது.

ஸ்டார்பக்ஸ் கடைகளில், பாகுபாட்டைத் தடுப்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.

சிரியாவில் ஆய்வு தொடங்கியது

சிரியா

பட மூலாதாரம், AFP

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டூமா பகுதிக்கு புதன்கிழமையன்று ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு செல்ல உள்ளதாக சிரியாவுக்கான ஐ.நா தூதர் பஷர் ஜாஃபாரி கூறியுள்ளார். இப்பகுதியில் இரண்டு வாரத்திற்கு முன்பு ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்தன.

பார்பாரா புஷ் மரணம்

, பார்பாரா புஷ்

பட மூலாதாரம், Reuters

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச் டபள்யு புஷ்ஷின் மனைவியும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயுமான, பார்பாரா புஷ் தனது 92வது வயதில் மரணமடைந்தார்.

கல்வியறிவு குறித்த பிரசாரம் மேற்கொண்டிருந்த இவர், பெற்றோர் மற்றும் குழந்தைகளின் கல்விக்காக ஒரு அமைப்பை தொடங்கினார்.

இஸ்ரேல், இரான் பதற்றம்

இஸ்ரேல் மற்றும் இரான்

பட மூலாதாரம், Getty Images

சிரியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான் தாக்குதலால், இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இரான் ராணுவம் பயன்படுத்துவதாக கூறப்படும் சிரியாவில் உள்ள ஐந்து விமான தளங்களில் செயற்கைக்கோள் படங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, இஸ்ரேல் இந்த படங்களை வெளியிட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: