முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் தனது 92ஆவது வயதில் காலமானார்.

இவர் ஜார்ஜ் எச் டபள்யு புஷ்ஷின் மனைவியும், ஜார்ஜ் டபள்யு புஷ்ஷின் தாயும் ஆவார்.

1989ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்த இவரின் உடல்நலம், சிறிது நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு மேல் சிகிச்சை நிறுத்தப்பட்டது.

அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இவரின் கணவருக்கு 93வயதாகிறது அவர் நீண்டகாலம் வாழ்ந்த அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெறுகிறார். பார்பராவின் மகன் ஜார்ஜ் புஷ் 2000ஆம் ஆண்டு அமெரிக்காவின் 43ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இருமுறை அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜார்ஜ் புஷ்ஷுடன் 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்

"எனது அன்பு அம்மா தனது 92ஆவது வயதில் காலமானார். லாரா, பார்பரா, ஜென்னா மற்றும் நான் துக்கத்தில் இருக்கிறோம், ஆனால் எனது அம்மாவின் ஆன்மா அமைதியில் உள்ளது என்பதால் எங்களின் மனதும் அமைதியாக உள்ளது. பார்பரா புஷ் மிகச் சிறந்த முதல் குடிமகளாக இருந்தார். பிறரை போல் இல்லாமல் உத்வேகம், அன்பு மற்றும் கல்வியை மில்லியன் கணக்கானவர்களுக்கு வழங்கியவர்.

அவரின் கடைசி காலம் வரை அவர் எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். பார்பரா புஷ்ஷை தாயாக பெற்ற நான் அதிர்ஷ்டசாலி; எனது குடும்பம் அவரை இழந்து வாடுகிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி" என ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.

பார்பரா புஷுக்கு ஜெப் புஷ் என்ற மற்றொரு மகனும் உள்ளார். அவர் 1999ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை ஃபுளோரிடாவின் ஆளுநராக செயல்பட்டார். மேலும் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

அமெரிக்காவின் முதல் குடிமகளுக்கான சில வரைமுறைகளை தகர்த்து, பார்பரா புஷ் அமைப்பை தொடங்கினார் அதில் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கல்வி அறிவுபெற வழிவகைச் செய்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: