சிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய அனுமதித்தது ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images
சிரியாவில் கடந்த புதன்கிழமையன்று சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை ரசாயன ஆயுத ஆய்வாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என ரஷ்யா கூறியுள்ளது.
சர்வதேச குழு, சனிக்கிழமை முதல் சிரியாவில் இருந்தாலும், டூமா பகுதியை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் சிரியா மீது கூட்டு தாக்குதல் நடத்தியது.
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடக்கவில்லை என சிரியாவும், அதன் கூட்டாளியுமான ரஷ்யாவும் கூறியுள்ளது.
ரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் ஆய்வாளர்கள், தங்களது ஆய்வுகளை தொடங்குவதற்காக காத்திருக்கின்றனர்.

பட மூலாதாரம், AFP
புதன்கிழமையன்று, தாக்குதல் நடந்த இடத்திற்கு ஆய்வாளர்கள் சென்று ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க மண் மற்றும் பிற பொருட்களின் மாதிரிகளைச் சேகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,ஹோம்ஸ் நகரத்தில் மேற்கு பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு, சிரிய வான் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததாக, செவ்வாய்க்கிழமையன்று சிரிய அரசு ஊடகம் கூறியுள்ளது.
இந்த ஏவுகணையை யார் ஏவியது என்பது தெரிவிக்கப்படவில்லை.
''அந்த நேரத்தில் அப்பகுதியில், எந்த ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை'' என அமெரிக்கா கூறியுள்ளது.
பிற செய்திகள்:
- #தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தமிழரின் பெருமைக்கும் என்ன தொடர்பு?
- "தரமான படங்களுக்கு இங்கு இடமில்லை" - தேசிய விருது பெற்ற ’டூ லெட்’ பட இயக்குநர் செழியன்
- சேலம் யானையைக் கருணைக் கொலைசெய்ய அனுமதி
- கத்துவா வழக்கு - 'எங்கள் மகளை கல்லறையில் புதைக்க கூட விடவில்லை'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












