பிரேசில்: தங்கள் தலைவரின் பெயரையும் இணைத்துக்கொண்ட 60க்கும் மேலான எம்.பிக்கள்

பிரேசில் நாடாளுமன்றத்தின் 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் பெயருடன் 'லுலா' எனும் பெயரை இணைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

லூயிஸ் இன்னசியோ 'லுலா' டா சில்வா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லூயிஸ் இன்னசியோ 'லுலா' டா சில்வா

கடந்த வாரம் சனிக்கிழமையன்று, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் லூயிஸ் இன்னசியோ 'லுலா' டா சில்வா ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் அவர்கள் இவ்வாறு தங்கள் பெயர்களை அதிகாரபூர்வமாக மாற்றியுள்ளனர்.

லுலா டா சில்வாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை தொழிலாளர் கட்சியின் தலைவர் கிளெய்சி ஹோஃப்மேன் தொடங்கி வைத்துள்ளார்.

இனி நாடாளுமன்ற ஆவணங்கள் அனைத்திலும் அவரது பெயர் கிளெய்சி லுலா ஹோஃப்மேன் என்றே இடம்பெறும்.

அக்கட்சியின் நாடாளுமன்ற கீழவையின் தலைவர் பாலோ பிமெண்டாவும் அவரது பெயரை பாலோ லுலா பிமெண்டா என்று மாற்றிக்கொண்டுள்ளார்.

வலதுசாரி கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் லுலா டா சில்வாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி செர்ஜியோ மோரோவின் பெயரைத் தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்டுள்ளனர்.

தன் மீதான வழக்கு அரசியல் நோக்குடையது என்று லுலா டா சில்வா கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: