உலகப் பார்வை: டிரம்புடன் உறவு - மன்னிப்பு கேட்ட `பிளேபாய்` பத்திரிகை மாடல்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
மன்னிப்பு கேட்ட மாடல்

பட மூலாதாரம், DIMITRIOS KAMBOURIS
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் 2006 ஆம் ஆண்டு உறவில் இருந்ததற்காக `பிளேபாய்` பத்திரிகையின் முன்னாள் மாடல் கரின் மெக்டொவுகல் டிரம்பின் மனைவி மெலினாவிடம் மன்னிப்புக் கோரி உள்ளார். சி.என்.என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், பத்து மாதங்கள் டிரம்புடன் உறவில் இருந்ததாகவும், முதல் சந்திப்பின் போது இந்த உறவுக்காக டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதற்காக தான் அழுததாதகவும் கூறி உள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை நிர்வாகமும், டிரம்பும் மறுத்துள்ளனர்.

ஐந்து பிரிவினைவாத தலைவர்கள் கைது

பட மூலாதாரம், Reuters
மேட்ரீடில் உள்ள ஸ்பானிஷ் நீதிமன்றம் ஐந்து கேட்டலான் பிரிவினைவாத தலைவர்களை கைது செய்ய கூறி தீரிப்பு வழங்கி உள்ளது. இந்த தலைவர்கள் மீது கேட்டலான் சுதந்திரத்தை வலியுறுத்தி கிளர்ச்சி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்ததும், நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டிருந்த மக்கள் போலீஸாருடன் கிளர்ச்சியில் ஈடுப்பட்டனர்.

இரான் நிறுவனத்துக்கு பொருளாதார தடை

பட மூலாதாரம், Reuters
இணைய தாக்குதலில் ஈடுப்பட்டதாக குற்றஞ்சாட்டி, இரானிய நிறுவனம் மற்றும் பத்து தனி நபர்களுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்துள்ளது அமெரிக்கா. மாப்னா என்ற நிறுவனம் இணைய தாக்குதலில் ஈடுப்பட்டு ஏறத்தாழ 31 டெராபைட் அளவிற்கான தனிநபர் தரவுகளை திருடி உள்ளது என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு. இந்நிறுவனம், 144 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரிட்டன், இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளை சேர்ந்த 176 பல்கலைக்கழகங்களின் மீது இணைய தாக்குதல் தொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரான்ஸ் தாக்குதல்

பட மூலாதாரம், PA
பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்தத துப்பாக்கிதாரி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீஸார் சிலரை அந்த துப்பாக்கிதாரியிடமிருந்து மீட்டனர். ஆனால், அந்த துப்பாக்கிதாரி ஒரு பெண்ணை மனித கேடயமாக வைத்துக் கொண்டார். அந்த பெண்ணிற்கு பதிலாக, பிணையாக உள்ளே சென்ற போலீஸ் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












