உலகப் பார்வை: "ஆயுதம் இல்லை என்றாலும் ஃபுளோரிடா பள்ளிக்குள் ஓடிச் சென்றிருப்பேன்"

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

Presentational grey line

"ஆயுதம் இல்லை என்றாலும் ஓடி சென்றிருப்பேன்"

உலகப் பார்வை

பட மூலாதாரம், AFP

தன்னிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும், கடந்த மாதம் ஃபுளோரிடா நகர பள்ளியொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியான சம்பவத்தின்போது வளாகத்தின் உள்ளே ஓடி சென்றிருப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"என்னிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும், அவ்விடத்திற்கு நான் கண்டிப்பாக சென்றிருப்பேன் என நம்புகிறேன்" என்று வெள்ளை மாளிகையில் மாகாண கவர்னர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Presentational grey line

அதிரடி பதவி நீக்கம்

உலகப் பார்வை

பட மூலாதாரம், Getty Images

தலைமை தளபதி உட்பட, தனது ராணுவத்தின் முக்கிய தளபதிகளை பதவி நீக்கம் செய்து சௌதி அரேபிய அரசு கட்டளை பிறப்பித்துள்ளது.

சௌதியின் அரசரான சல்மான்,, அந்நாட்டின் தரைப்படை மற்றும் விமானப்படையின் தளபதிகளையும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய அமைச்சரவை அறிவிப்பு

உலகப் பார்வை

பட மூலாதாரம், AFP

தென்னாபிரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள சிறில் ராமபோசா, முந்தைய அரசின் அமைச்சரவையில் கணிசமான மாற்றங்களை செய்து தனது புதிய அரசாங்கத்திற்கான அமைச்சரவையை அறிவித்துள்ளார்.

குறிப்பாக முந்தைய அதிபர் ஜேக்கப் ஜுமாவினால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மிஸ்லாம் சின்னின்னேவுக்கு நிதியமைச்சர் பதவியை வழங்கியுள்ளார்.

Presentational grey line

குறைந்து வரும் பெங்குவின்கள்

உலகப் பார்வை

பட மூலாதாரம், CNRS

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால், கிங் பெங்குவின்கள் மோசமான பிரச்சனையின் கீழ் சிக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்டார்டிகாவை சுற்றியுள்ள கடற்பகுதியில் இந்த வகை பெங்குவின்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் அப்பகுதியுள்ள சில தீவுகள் அவை வாழத்தகுதியற்றவை ஆகிவிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :