You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா போர்: அரசுப்படை தாக்குதலில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி
சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டா பகுதியின் மீது அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டு முற்றுகைக்கு பின்னர் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மிகவும் கொடூரமான நாட்களில் திங்கள்கிழமையும் ஒன்றாகும்.
செவ்வாய்க்கிழமை காலையும் குண்டுகள் தொடர்ந்து வீசப்பட்டு வருவதாக “ஒயிட் ஹெல்மட்” என்று அறியப்படும் சிரியா பொது மக்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
கிழக்கு கூட்டா தலைநகருக்கு அருகிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கடைசி குடியிருப்பு பகுதியாகும். இந்த பகுதி முழுவதும் அரசு கட்டுபாட்டு பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
டூமா, மிஸ்ராபா மற்றும் அல்-நாஷபியாவில் நடத்தப்பட்டுள்ள புதிய வான்வழி தாக்குதல்களில் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஒருங்கிணைப்பு குழுக்கள் என்கிற கிளர்ச்சியாளர் செயற்பாட்டாளர் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை, மிஸ்ராபாவில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அல்-மர்ஜில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் “ஒயிட் ஹெல்மட” தெரிவித்திருக்கிறது.
பிரிட்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்ற கண்காணிப்பு குழுவான “சிரியன் அப்சர்வேட்டிரி ஃபார் ஹூமன் ரைட்ஸ்” மற்றும் “ஒயிட் ஹெல்மட்” இரண்டும் இணைந்து திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
போர் நிலைமை கட்டுப்பாடின்றி செல்வதாக கூறியுள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அதிகாரி ஒருவர், தக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நான்கு லட்சம் பேர் வாழுகின்ற கிழக்கு கூட்டா பகுதி கடந்த சுமார் 3 மாதங்களில் கடந்த வாரம்தான் முதலுதவி பொருட்கள் சென்றடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ஆந்திராவில் இறந்த ஐவரின் உடற்கூறாய்வை மீண்டும் நடத்தக் கோரிக்கை
- குழந்தைக்கு தாய்ப்பால் அளித்த முதல் திருநங்கை: எப்படி சாத்தியமானது?
- இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர்
- கமல் ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு?
- செம்மரக் கும்பலிடம் இருந்து தப்பி வந்தவர் என்ன சொல்கிறார்?
- இந்தியாவுக்கு வருகை புரிந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்